Vijay Lip lock Trisha: சில மாதங்களாக அடங்கி போய் இருந்த விஜய், சங்கீதா விவாகரத்து விஷயம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் திரிஷா இல்லனா கீர்த்தி என தளபதி போடும் ஆட்டம் தான் என திரையுலகினர் அனைவரும் அதிர்ச்சி விலகாத நிலையில் பேசி வருகின்றனர்.
ஏற்கனவே வாரிசு பட இசை வெளியீட்டின் போது இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. அதிலும் கீர்த்தி சுரேஷ் தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என்று உறுதியாக சொல்லப்பட்டது. அந்த சூழலில் தான் லியோவில் திரிஷா கமிட் செய்யப்பட்டார். ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே இவர்களைப் பற்றிய வதந்தி உலா வந்தது.
இந்த நிலையில் இப்போது அதுவே விவாகரத்துக்கு காரணமாக அமைந்து விட்டதாம். அதாவது லியோவில் ஒரு லிப்லாக் சீன் இருக்கிறது. பொதுவாக லோகேஷ் இதுபோன்ற ரொமான்ஸ் விஷயங்களில் ஆர்வம் காட்ட மாட்டார் ஆனால் விஜய் கட்டாயத்தின் பேரிலேயே இப்படி ஒரு காட்சி வைக்கப்பட்டதாம். படம் வெளி வருவதற்கு முன்பே இந்த விஷயம் செய்தியாக கூட வெளிவந்திருந்தது.
இதனால் லோகேஷ் மற்றும் விஜய் இருவரின் சுமூகமான நட்பும் கூட முறிந்ததாக பேசப்பட்டது. ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது லியோவில் இருக்கும் இந்த காட்சியும் சங்கீதா மனம் உடைந்து போவதற்கு ஒரு காரணம் என்று என கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி லியோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே இருவருக்கும் விவாகரத்து நடந்து விட்டது என ஒரு அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. இப்படி ஒன்னும் ஒன்னும் இரண்டு என்பதற்கு ஏற்ப நடந்த விஷயங்கள் அனைத்தும் விஜய்க்கு எதிராகவே இருந்த நிலையில் குடும்ப வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இப்படியாக வெளிவந்துள்ள இந்த செய்தி கடும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. விரைவில் விஜய் தரப்பில் இருந்து இதற்கான விளக்கம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்பதற்கு ஏற்ப இந்த விவாகரத்து விஷயமும் விரைவில் அம்பலத்திற்கு வரும்.