சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ஸ்டைலிஷ் இயக்குனரிடம் திருப்பாச்சி மாதிரி கதையைக் கேட்ட விஜய்.. உன் சவகாசம் வேண்டாம் என கிளம்பிய பிரபலம்

விஜய், லோகேஷ் கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து இந்த படத்திற்கான அப்டேட் அடுத்தடுத்ததாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ப்ரோமோ வீடியோவுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்பு விக்னேஷ் சிவன் விலகப்பட்டால் அவரது கேரியர் என்னாகும் என அஜித்தை கலாய்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : சிம்பு பிறந்த நாளுக்கு அஜித், விஜய் அப்டேட்.. இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பெஷல் டே ஆக அமையும்.!

இதேபோல் விஜய்யின் கேரியரிலும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு கௌதம் மேனன் மற்றும் விஜய் கூட்டணியில் யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படம் உருவாவதாக இருந்தது. இதற்கான டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாக கூறப்பட்டது. முதல்முறையாக இந்த கூட்டணி இணைவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் அப்போது விஜய் திருப்பாச்சி சிடியை கொடுத்து, இது போன்ற கதையை தயார் செய்து வருமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read : நான் என்றும் அஜித்தின் ரசிகன் தான்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மூன்றெழுத்து நாயகன்

இதனால் உச்சகட்ட டென்ஷனான கௌதம் வாசுதேவ் மேனன் விஜய்யின் சவகாசமே வேண்டாம் என இந்த படத்தை கைவிட்டு உள்ளாராம். அதன் பின்பு கௌதம் மேனன் கமல், சூர்யா, அஜித் என பல முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கினாலும் தற்போது வரை விஜய்யின் படத்தை இயக்க முன்வரவில்லை.

இவ்வாறு விஜய் பிரபல இயக்குனரை டீலில் விட்ட நிலையில் இப்போது அஜித்தை விமர்சிக்க இவர்களுக்கு தகுதியே இல்லை என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். சினிமாவை பொறுத்தவரையில் டாப் நடிகர்களுக்கு எந்த இயக்குனரின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம் தான்.

Also Read : 16 நாட்களில் வாரிசு படத்தின் ஒட்டு மொத்த வசூல்.. ஆட்டநாயகனாக பாக்ஸ் ஆபிஸையே மிரட்டி விட்ட விஜய்

- Advertisement -spot_img

Trending News