ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சுக்கு நூறாய் உடைந்து ஒட்ட முடியாத 3 கூட்டணி.. தளபதியே ஒத்துக்கிட்டாலும் பெயர் போயிடும்னு மறுக்கும் இயக்குனர்கள்

பொதுவாக பெரிய ஹீரோக்கள் படம் என்றால் ஹீரோக்களின் தலையீடு அதிகமாக இருக்கும். இயக்குனர்கள் தங்கள் கதையை முழு சுதந்திரத்தோடு எடுக்க முடியாது. அந்த ஹீரோ, ரசிகர்கள் அதை விரும்புவார்கள், இதைத்தான் விரும்புவார்கள் என பல குறுக்கீடுகள் செய்வார். பெரிய ஹீரோக்கள் தங்களுக்கென்று ஒரு இமேஜை வைத்திருப்பார்கள்.

ஏ ஆர் முருகதாஸ்: விஜய்க்கு பல ஹிட் படங்கள் கொடுத்து அவரை பாக்ஸ் ஆபீஸ் ஹீரோவாக மாற்றியதில் பெரும்பங்கு வகிப்பவர் முருகதாஸ். ஆனால் சமீபத்தில் இவரை விஜய் ஒதுக்கி விட்டார். நிறைய கதைகளை சுட்டு படம் எடுக்கிறார் என்று இவர் மீது ஒரு பழியை போட்டு விட்டனர். அதிலிருந்து விஜய் இவருக்கு வாய்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டார். முருகதாசும் இனிமேல் விஜய் வைத்து படம் எடுப்பதற்கு தயாராக இல்லை.

நெல்சன்: விஜய்யை வைத்து பீஸ்ட் படம் எடுத்து எதிர்மறை விமர்சனங்களை சம்பாதித்து விட்டார் நெல்சன். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் தோல்வியை தழுவியது. மன சங்கடத்தில் இருந்த நெல்சன் ஒரு கட்டத்திற்கு மேல் எங்களை சுதந்திரமாக செயல்பட விட்டால் போதும், நாங்கள் எங்கள் திறமையை நிரூபிப்போம் என்று வெளிப்படையாக சொல்லிவிட்டார். இதனால் விஜய் அவரின் கதையை மாற்றியதாக தெரிகிறது.

வம்சி பைடிபள்ளி: விஜய் நடித்த வாரிசு படத்தை இயக்கியவர் வம்சி. அந்த படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ், இவர் ஒரு தெலுங்கு தயாரிப்பாளர். வாரிசு படம் தெலுங்கானாவில் ரிலீஸ் ஆவதில் பெரும் பிரச்சனையே வந்தது. அவர்கள் அங்கே உள்ள ஹீரோக்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படம் அங்கே ஓடவும் இல்லை. இதனால் விஜய் அடுத்த முறை இயக்குனர் வம்சிக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்.

Trending News