வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நெல்சனை காப்பாற்றிய அந்த ஒரு கதாபாத்திரம்.. யோகிபாபுவை தூக்கி சாப்பிட்ட காமெடியன்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் பலத்த வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு பல கலவையான விமர்சனங்கள் வெளிவந்தாலும் படம் அனைவரையும் கவர்ந்துள்ளதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகர் விடிவி கணேஷ் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்ட் ஆகி வருகிறார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விடிவி கணேஷ் காமெடியில் கலக்கி உள்ளார்.

இயக்குனரின் முந்தைய திரைப்படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் இவர் தேர்ந்தெடுத்திருந்த நடிகர்களும் அந்த கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார்கள். இவரின் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் கூட காமெடி காட்சிகள்தான் படத்தை தூக்கி நிறுத்தியது.

அதை வைத்து பார்க்கும் பொழுது இந்த பீஸ்ட் திரைப்படத்திலும் விடிவி கணேஷின் காமெடி காட்சிகள் செம ரகளையாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். வழக்கமாக விடிவி கணேஷ் அவருடைய வித்தியாசமான குரலில் பேச ஆரம்பித்தாலே அனைவருக்கும் சிரிப்பு வந்துவிடும்.

இப்போது அதைப் பற்றி கூறும் ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் அவர் அதிக அளவில் ஸ்கோர் செய்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யின் நடிப்பு, அனிருத்தின் இசை, ஹீரோயின் டான்ஸ் என்று ஏகப்பட்ட விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்து இருந்த நிலையில் காமெடி காட்சிகள் பயங்கர அலப்பறையாக இருக்கிறதாம்.

அதிலும் அவரின் காமெடி காட்சிகள்தான் படத்தை பல இடங்களில் காப்பாற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் விடிவி கணேஷ் இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு பிசியான நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சோஷியல் மீடியாவில் டிரண்டாகி வரும் இவருக்கு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News