Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வேட்டையன் எப்படி இருக்கு.? வெங்கட் பிரபுவிடம் விஜய் கூறிய விமர்சனம் இதுதான்

வேட்டையன் எப்படி இருக்கு.? வெங்கட் பிரபுவிடம் விஜய் கூறிய விமர்சனம் இதுதான்

சமீபத்தில் வெளியான வேட்டையன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை முதல் நாளே விஜய் பிரபலமான ஒரு திரையரங்கில் பார்த்துள்ளார். ஆனால் அவருடன் வெங்கட் பிரபு இருந்தது பல பேருக்கு தெரிந்திடாத ஒன்று. மேலும் இதற்க்கு […]

சமீபத்தில் வெளியான வேட்டையன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை முதல் நாளே விஜய் பிரபலமான ஒரு திரையரங்கில் பார்த்துள்ளார். ஆனால் அவருடன் வெங்கட் பிரபு இருந்தது பல பேருக்கு தெரிந்திடாத ஒன்று. மேலும் இதற்க்கு முந்தைய படங்களை தளபதி இப்படி வந்து FDFS எல்லாம் பார்த்ததில்லை. அப்படி இருக்க ஏன் வேட்டையன் மீது மட்டும் இவ்வளவு ஆர்வம் என்று தெரியவில்லை.

அமிதாப் பச்சன், ராணா, பஹத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இப்படத்தில் நடித்திருந்தனர். ஜெய் பீம் போன்ற ஒரு படத்தை இயக்கிய ஞானவேல் ரஜினியுடன் இணைகிறார் என்றதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. மேலும் வேட்டையன் படத்தின் ஷோ ஸ்டீல்லராக பஹத் பாசிலும் துஷார விஜயனும் தான் உள்ளார். இவர்கள் நடிப்பில் தலைவரையே மிஞ்சி விட்டனர்.

வேட்டையன் படத்தில் சொல்ல வரும் கருத்துக்காக ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகின்றார் இயக்குனர் ஞானவேல். ஆனால் வேட்டையன் முழுக்க முழுக்க ரஜினியின் ஸ்டைலில் உருவான படம் இல்லை என்பதனால் ஒரு சில ரசிகர்களுக்கு படம் ஒட்டவில்லை.

விஜய் சொன்ன அந்த விஷயம்

தளபதி விஜயை பொறுத்தவரையில், சிறுவயதிலிருந்தே தலைவர் படத்தை பார்த்து வளர்ந்தவர். தலைவரின் மிக பெரிய fan என்றே சொல்லலாம். இப்படி இருக்க, ரசிகர்கள் தான் தேவையற்ற வன்மத்தில் செயல்பட்டுவருகின்றனரே தவிர, அவர்களுக்குள் ஒற்றுமையாக தான் இருக்கின்றனர்.

வேட்டையன் திரைப்படம் வெளியான முதல் நாளே இப்படத்தை தளபதி விஜய் பார்த்துள்ளார். சென்னையில் இருக்கும் ரோகினி திரையரங்கில் தான் விஜய் வேட்டையன் திரைப்படத்தை பார்த்துள்ளார். அவருடன் இயக்குனர் வெங்கட் பிரபுவும் உடன் இருந்தார். இதையடுத்து சமீபத்தில் வெங்கட் பிரபு பேசுகையில், வேட்டையன் திரைப்படம் விஜய் சாருக்கு ரொம்ப பிடித்துள்ளது. தலைவர் படத்தை யாருக்கு தான் பிடிக்காது என கூறினார். இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.