திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கௌதம் மேனனுக்கு கண்டிஷன் போட்ட விஜய்.. புலம்பித் தவிக்கும் இயக்குனர்

தளபதி விஜய், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி யோஹன் அத்தியாயம் படம் உருவாவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படம் தடைப்பட்டுப் போனது. இருந்தபோதும் கண்டிப்பாக விஜயுடன் ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் ஆசையுடன் கௌதம் மேனன் உள்ளார்.

இந்நிலையில் தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரமோஷனுக்காக பல்வேறு ஊடகங்களுக்கு கௌதம் மேனன் பேட்டி கொடுத்து வருகிறார்.  தற்போது கௌதம்மேனன், விஜய் படத்தைபற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

Also Read :தளபதி 67 இன்னும் ஆரம்பிக்கவே இல்ல.. பல கோடி ரூபாய் லாபம் பார்த்த விஜய்

ஏற்கனவே லோகேஷ் விஜய்யை வைத்து இயக்க உள்ள தளபதி 67 படத்தில் கௌதம் மேனனுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் லோகேஷ்-க்கு அடுத்தபடியாக விஜய்யின் படத்தை கௌதம் மேனன் இயக்க வாய்ப்பு உள்ளது .

ஆனால் கௌதம் மேனனுக்கு விஜய் ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம் அதாவது எப்போதுமே கௌதம் மேனன் படப்பிடிப்பு நடத்துவதற்கு முன்பு முழு கதையும் தயார் செய்ய மாட்டார். படப்பிடிப்பு எடுக்கும் போதுதான் கதையை ரெடி பண்ணுவார்.

Also Read :கமல், விஜய், கௌதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம்..பக்காவாக காய் நகர்த்தும் உலகநாயகன்.!

ஒருவேளை படப்பிடிப்பு நடக்கும் போதே கதையை மாற்றவும் செய்வார். இதனால் முன்கூட்டியே விஜய் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்து எடுத்து வாருங்கள் கண்டிப்பாக படம் பண்ணலாம்னு சொல்லி உள்ளாராம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் கௌதம் மேனன் குழப்பத்தில் உள்ளாராம்.

தற்போது தளபதி விஜய்க்காக முழுக்கதையும் கௌதம் மேனன் தயார் செய்துவருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் தளபதி 68 படம் விஜய், கௌதம் மேனன் கூட்டணியில் உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

Also Read :டீச்சராக சக்சஸ் செய்து காட்டிய 5 படங்கள்.. ஜாக் டேனியலுடன் சாட்டையை சுழற்றிய மாஸ்டர் விஜய்

Trending News