தளபதி இடத்துக்கு தள்ளப்படும் சிவகார்த்திகேயன்.. அஜித், விஜய் இயக்குனருடன் மாஸ் கூட்டணி

Sivakarthikeyan: சினிமாவில் டாப் நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் தளபதி விஜய் இருந்து வருகிறார். ஆனாலும் அரசியல் மீதுள்ள ஈடுபாடு காரணமாக கோட் படத்திற்குப் பிறகு வினோத்துடன் ஒரு படத்தில் மட்டும் கூட்டணி போட இருக்கிறார். அதன் பிறகு முழுவதுமாக அரசியல் களத்தில் இறங்க இருக்கிறார்.

இந்த சூழலில் விஜய்யின் இடத்தை பிடிப்பதற்காக இப்போது உள்ள இளைய ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் விஜய்யின் இடத்திற்கு தள்ளப்படுவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அதாவது இப்போது சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸின் படத்திலும் நடித்து வருகிறார். இப்போது விஜய் மற்றும் அஜித் பட இயக்குனருடன் கூட்டணி போட இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் கூட்டணி போடும் விஜய் பட இயக்குனர்

அஜித்துக்கு மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு இப்போது விஜய்யின் கோட் படத்தை எடுத்திருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி கோட் படம் திரையில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான பிரமோஷனில் இப்போது படக்குழு ஈடுபட்டு வருகிறது.

அந்தச் சமயத்தில் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி குறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்கப்பட்டது. தன்னுடைய படத்தின் அடுத்த ஹீரோ சிவகார்த்திகேயன் தான் என்பதை அந்த பேட்டியில் வெளிப்படையாகவே வெங்கட் பிரபு கூறி சஸ்பென்சை உடைத்தார்.

ஆனால் சிவகார்த்திகேயன் இப்போது சில படங்களில் கமிட்கி இருப்பதால் அந்த படங்களை முடித்த பிறகு தான் தன்னுடைய படத்தில் நடிக்க உள்ளார் என்றும் வெங்கட் பிரபு கூறினார். ஆகையால் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் கூட்டணி கண்டிப்பாக கலக்கலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →