ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய்யின் ஹிட் படத்தில் தலைகாட்டிய 5 இயக்குனர்கள்.. பாஸ் எங்களுக்கும் நடிக்க தெரியும்

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தன்னுடைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் வருவதை வழக்கமாக வைத்திருப்பார். அதேபோல் விஜய் படத்தை இயக்கும் இயக்குனர்கள் அந்த அந்தப் படத்தில் கேமியோ தோற்றத்தில் வந்த அசத்தியுள்ளனர். சமீபகாலமாக விஜய்யின் பெரும்பாலான படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிறது.

ஆரம்ப காலத்தில் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் போக்கிரி. இப்படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற போக்கிரி பொங்கல் பாடலில் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவா நடனம் ஆடியிருப்பார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதைத்தொடர்ந்து விஜய்க்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த துப்பாக்கி படத்தை இயக்கியவர் ஏ ஆர் முருகதாஸ். இப்படத்தில் கூகுள் கூகுள் என்ற பாடலில் ஒரு சில காட்சிகளில் நடனமாடி இருப்பார். இதற்கு அடுத்தபடியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில்.

இப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஹிட்டான சிங்கப் பெண்ணே பாடலில் விஜயுடன் அட்லி சில காட்சிகளில் தோன்றி இருப்பார். அதன்பிறகு கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விஜய்யின் மாஸ்டர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் இயக்குனர் தோன்றி இருப்பார்.

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா பாடல் இணையத்தில் வெளியானது.

இதில் விஜய் உடன் இணைந்த இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும், இசையமைப்பாளர் அனிருத்தும் தோன்றியிருந்தனர். இவ்வாறு விஜயின் படங்களில் இயக்குனர்கள் சில காட்சிகளில் வருவதை ரசிகர்களும் விரும்புகிறார்கள். அதேபோல் விஜய்க்கும் அந்த படங்கள் ஹட் கொடுக்கிறது.

Trending News