திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உச்சகட்ட பயத்தில் நெல்சன், களத்தில் இறங்கிய தளபதி.. மாஸாக வரப்போகும் அப்டேட்

Actor Vijay: இளம் இயக்குனரான நெல்சன் தற்போது ஜெயிலர் படத்தை இயக்கி உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என மிகப் பெரிய திரை பட்டாளத்தையே ஜெயிலர் மூலம் கையாண்டு உள்ளார் நெல்சன். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த சூழலில் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் ஜெயிலர் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைக்குமா என்ற நிலையே அப்போது இருந்தது. ஆனால் ரஜினி தான் எடுத்த முடிவிலிருந்து பின் வாங்காமல் நெல்சனை கைவிடவில்லை.

Also Read : லியோ வியாபாரத்தை துவம்சம் செய்த ஜெயிலர்.. எப்போதும் நான் தான் நம்பர் ஒன் என மீண்டும் நிரூபித்த ரஜினி

இப்போது ஜெயிலர் ரிலீஸ் தேதி நெருங்குவதால் நெல்சன் உச்சகட்ட பயத்தில் உள்ளார். இந்தப் படமும் சொதப்பிவிட்டால் தலை தப்பாது என்ற நிலையில் இருக்கிறார். ஆகையால் படத்தின் பிரம்மாண்ட பிரமோஷன் கண்டிப்பாக அதிக வசூலை பெற்று தரும். இப்போது நெல்சனுக்கு கை கொடுக்க ஜெயிலரில் இறங்கி உள்ளார் தளபதி விஜய்.

அதாவது நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக தளபதி விஜய் கலந்து கொள்ள இருக்கிறாராம். பொதுவாக விஜய்யின் இசை வெளியீட்டு விழா எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறும்.

Also Read : ரஜினியை மீறி நினைத்ததை சாதித்த நெல்சன்.. ஜெயிலரில் நண்பனுக்காக செய்த சம்பவம்

ஏனென்றால் அவருடைய குட்டி ஸ்டோரி மற்றும் அரசியல் நுணுக்கங்களான பேச்சு என அனைத்துமே ரசிகர்களை கவரும். இப்படி இருக்கும் சூழலில் சூப்பர் ஸ்டார் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் வருவது மேலும் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. அதுவும் இந்த விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருக்கிறது.

அதாவது லோகேஷ் இயக்கத்தில் தற்போது விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயிலர் பட விழாவில் ரஜினி லோகேஷ் இணையும் படத்திற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ஆகையால் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ரஜினி ரசிகர்களை தாண்டி விஜய் ரசிகர்களையும் திக்கு முக்காட செய்ய இருக்கிறது. தளபதியை வைத்து ஜெயிலர் படத்திற்கு நெல்சன் ப்ரோமோஷன் தேடிக்கொள்ள உள்ளார்.

Also Read : விஜய்யிடம் காரை பரிசாக வாங்க 4 பிரபலங்கள்.. ஓடாத படத்திற்கு இவ்வளவு பில்டப் தேவையா தளபதி

Trending News