ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய்யை கையெடுத்துக் கும்பிட்ட பிரபல நடிகர்.. எல்லாம் பீஸ்ட் சம்பவம்தான் காரணம்!

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டு காலை முதல் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு கொண்டிருக்கிறது. இந்தப்படத்தின் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக மட்டுமே படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் படத்தில் ஒரு சில சொதப்பல்கள் தான் படத்தின் சுவாரஸ்யத்தை குறைந்துள்ளதாகவும் கூறி வருகின்றனர். இருப்பினும் தளபதி ரசிகர்கள் விஜய்யின் கட் டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பது என தியேட்டரையே ஒரு திருவிழா போல கொண்டாடினர்.

தற்போது பார்த்திபன் விஜயை வணங்குவதாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சில குறிப்புகளை குறிப்பிட்டுள்ளார். ‘The Dawns Here Are Quiet’ (விடிகாலையில் இங்கே நிலநடுக்கம் என்ற அர்த்தமுள்ள) ரஷ்யன் திரைப்படம் ஒன்று இருக்கிறது.

ஆனால் இன்று விடியற்காலையில் இங்கே நிலநடுக்கம் காரணமாய் அமைதியே வடிவான விஜய் என்னும் பீஸ்ட். நேற்றைய இரவின் நிழல்களாய் ஆங்காங்கே உறைந்து கிடக்கிறது.

விடியலை, உண்டுயலை உடைப்பதைப் போல உடைத்தெடுத்து, திரையரங்குகளை திருவிழாகளாக்கிய ரசிகர்களை வணங்குகிறேன் என பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, இரவின் நிழல் போஸ்டரையும் இணைத்து ட்விட் செய்துள்ளார்.

beast-parthiban-twit
beast-parthiban-twit

இவன் மட்டுமல்ல சினிமா பிரபலங்கள் பலரும் பீஸ்ட் படத்தின் வெளியீட்டை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தளபதிக்கும் அவருடைய பட குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Trending News