புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அசுர வளர்ச்சியில் தளபதி.. பிகில் முதல் தளபதி 68 வரை வாங்கிய சம்பளம், ரைடு மட்டும் போய்டாதீங்க சார்

விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தெறிக்கவிடும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்து ஆக வேண்டும் என்று பட குழுவினர் அனைவரும் தீயாக வேலை பார்த்து வருகிறார்கள். ஏனென்றால் அக்டோபர் மாதம் இப்படத்தை திரையில் வெளியிடுவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள்.

அடுத்ததாக லியோ படத்தை முடித்த பின் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போவதாக உறுதி ஆகி இருக்கிறது. வெங்கட் பிரபு கதையை தயார் செய்து விஜய் இடம் சொன்னதும் அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால் இந்த படத்தில் நடிப்பதற்கு உடனே சம்மதத்தை தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

Also read: தளபதியின் காலை வாரிவிட்ட 5 சொதப்பலான இயக்குனர்கள்.. சூனியமாக மாறிய வருடம்

மேலும் வெங்கட் பிரபு ஏற்கனவே பல வெற்றி படங்களை இயக்கி அஜித் மற்றும் சிம்புவுக்கு சினிமா கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளார். தற்போது முதல் முறையாக விஜய்யுடன் கூட்டணி வைத்து தளபதி 68 படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தை தயாரித்து இருக்கிறது.

அத்துடன் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்துக்கு விஜய்யின் சம்பளம் 200 கோடி கொடுப்பதற்கு தயாரிப்பு நிறுவனம் முன் வந்திருக்கிறது. இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் ரொம்பவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் ஏறுகிற சம்பளம் தான்.

Also read: விஜய்க்கு மட்டும் ஒர்க் அவுட் ஆன காஷ்மீர் ட்ரிப்.. புது பிரச்சனையால் நொந்து போன சிவகார்த்திகேயன்

அதாவது பிகில் படத்தில் 50 கோடியில் ஆரம்பித்து, அடுத்து மாஸ்டர் படத்தில் 80 கோடி, பீஸ்ட் படத்தில் 100 கோடி, வாரிசு படத்தில் 125 கோடி, தற்போது நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தில் 150 கோடி என்று ஒவ்வொரு படத்திலும் சம்பளத்தை அதிகரித்து வருகிறார். அடுத்ததாக தளபதி 68க்கு 200 கோடி சம்பளத்தை பெற இருக்கிறார். இப்படி அசுர வளர்ச்சியை அடைந்து வருகிறார்.

இந்திய திரையுலகில் எந்த நடிகரும் இந்த அளவுக்கு பெரிய சம்பளமாக யாரும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் முதல் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு கிடைத்துள்ளது. மேலும் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிட இருக்கிறார்கள். மேலும் இவருடைய சம்பளத்தை கேட்டுவிட்டு ரைடு போயிடாதீங்க சார் தளபதி எல்லாமே பக்காவாக தான் வைத்திருப்பார்.

Also read: என்னது வெங்கட் பிரபு கூட்டணியில் விஜய்யா.? ஓவர் ரிஸ்கில் தளபதி-68

Trending News