Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வசூலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் விஜய்.. அப்ப வலிமை இல்லையா

வசூலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் விஜய்.. அப்ப வலிமை இல்லையா

சினிமாவில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வணிகரீதியாக வெற்றி பெற்றால் மட்டுமே படத்தை வெற்றி என்று அறிவிக்கப்படுகிறது. தயாரிப்பாளர்கள் ஹீரோக்கள் மற்றும் கதையை நம்பி பணத்தை முதலீடு செய்கிறார்கள். அவ்வாறு அந்த படத்தில் அவர்களுக்கு லாபம் […]

சினிமாவில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வணிகரீதியாக வெற்றி பெற்றால் மட்டுமே படத்தை வெற்றி என்று அறிவிக்கப்படுகிறது. தயாரிப்பாளர்கள் ஹீரோக்கள் மற்றும் கதையை நம்பி பணத்தை முதலீடு செய்கிறார்கள்.

அவ்வாறு அந்த படத்தில் அவர்களுக்கு லாபம் கிடைத்தால் மட்டுமே அடுத்த படத்தை நிதி நெருக்கடி இல்லாமல் அவர்களால் தயாரிக்க முடிகிறது. அந்த வகையில் பிளாக்பஸ்டர ஹிட்டடித்த படங்களில் அதிகம் ரஜினிகாந்த், விஜய், அஜித் படங்கள் தான் இடம் பெற்றுள்ளது.

ஆனால் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்ல லாபத்தை ஈட்டுகிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் தான். அவ்வாறு கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த, அஜித் நடிப்பில் வெளியான வலிமை, விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனால் வசூலை பொருத்தவரை படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் பார்த்தது. இந்நிலையில் ரசிகர்கள் வசூலில் முதலிடத்தில் இருப்பது அஜித் நடித்த வலிமை படம் என நினைத்திருந்தனர். ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் தான் தற்போது வரை நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

இந்தச் செய்தியை வலிமை படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை பெற்ற அன்புச்செழியன் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார். அஜித் படத்தில் டிஸ்ட்ரிபியூட்டரே இப்படி சொல்லியிருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

மேலும் எப்போதுமே விஜய் படம்தான் வசூலில் முதலிடத்தில் இருக்கும் என அவரது ரசிகர்கள் பெருமை கொள்கின்றனர். மேலும் தளபதி சாதனையை அவரால் மட்டுமே முறியடிக்க முடியும் என கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.