Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

எலக்சன் ஜுரத்துக்கு இப்பவே மருந்து ரெடி பண்ணியே தளபதி.. மோதிப் பார்க்க நாள் குறித்த விஜய்

எலக்சன் ஜுரத்துக்கு இப்பவே மருந்து ரெடி பண்ணியே தளபதி.. மோதிப் பார்க்க நாள் குறித்த விஜய்

தளபதி 69, எச் வினோத் இயக்கும் படம் நவம்பர் மாதம் சூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார். ஒரே ஸ்ட்ரெட்ச் ஆக இதை முடிக்க வேண்டும் எனவும் கட்டளை இட்டிருக்கிறார். […]

தளபதி 69, எச் வினோத் இயக்கும் படம் நவம்பர் மாதம் சூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார். ஒரே ஸ்ட்ரெட்ச் ஆக இதை முடிக்க வேண்டும் எனவும் கட்டளை இட்டிருக்கிறார். முழு ஸ்கிரிப்ட்டையும் ரெடி பண்ணிய வினோத் 2025 மே மாதம் இந்த படத்தின் சூட்டிங்கை முடிக்கிறார்.

2025 ஏப்ரல் மே, மாத இறுதியில் தளபதி 69 பட சூட்டிங் முடிந்தாலும். விஜய் அதன் ரிலீஸ் தேதியை மட்டும் அறிவிக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார். அந்த படத்தின் மூலம் எலெக்சனுக்கு ஒரு பெரிய ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படம் விஜய்யின் அரசியலுக்கு ஒரு அஸ்திவாரமாக இருக்கும் என கூறுகின்றனர்.

தளபதி 69 படத்தை 2026 எலக்சன் காய்ச்சல் ஆரம்பிக்கும் போது வெளியிடலாம் என்று திட்டம் போட்டு வைத்திருக்கிறார் விஜய். இந்த படத்திற்கு ஏதாவது இடையூறு வந்தால் கூட அது விஜய்க்கு பாசிட்டிவ் விஷயமாக மாறிவிடும். அதனால் இந்த படம் எலக்சன் நேரத்தில் தான் வெளிவரும்.

ஏற்கனவே மாநாட்டில் விஜய் என்ன ஆனாலும் சரி மோதிப் பார்க்க போறோம் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். அந்த படத்திற்கு எந்த ரூபத்திலும் பிரச்சினை வந்து விடக்கூடாது என இப்பவே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். அதற்கு ஹச் வினோத்தும் தயாராகி வருகிறார்.

அரசியல்வாதியாகவும் தன்னை விஜய் மாநாட்டில் நிரூபித்துக் காட்டிவிட்டார். 55 ஆயிரம் என அனுமதி வாங்கிய போதிலும் அங்கே திரண்டு வந்தவர்கள் இரண்டு லட்சம் பேர். மும்மடங்கு கூட்டத்தை எதிர்பார்க்காத விக்கிரவாண்டி வி சாலை ஸ்தம்பித்து போனது. எலக்சனுக்காக இப்பொழுதே எல்லா விதத்திலும் தயாராகி வருகிறார் தளபதி.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.