Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

கைதி’ வாய்ப்பைத் தவறவிட்ட விஜய் சேதுபதி..கார்த்திக்கு அடித்த ஜாக்பாட்!

கைதி’ வாய்ப்பைத் தவறவிட்ட விஜய் சேதுபதி..கார்த்திக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும்,கேரக்டர்களையும் செலக்ட் நடிப்பதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான‘கைதி’படத்தின் பின்னணியில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது கவனம் பெற்று வருகிறது.


2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான’கைதி’படம்,பாடல்கள் மற்றும் ஹீரோயின் இல்லாமலேயே விறுவிறுப்பான ஸ்க்ரீன்பிளேயால் ரசிகர்களைக் கவர்ந்தது.கார்த்தி ஏற்று நடித்த டில்லி கேரக்டரும் அவருடைய திரைப்பயணத்தில் முக்கியமான கேரக்டர்களில் ஒன்றாக அமைந்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜின் இயக்கத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.


இந்நிலையில்,‘கைதி’படத்தின் கதை முதலில் தன்னிடம் வந்ததாகவும்,பேச்சுவார்த்தை நடைபெற்ற சூழலில் அந்த வாய்ப்பு அமையாமல் போனதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்ததாகப் பகிரப்படும் தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.பின்னர் கார்த்தி தன்னைத் தொடர்புகொண்டு அந்தப் படத்தில் நடிக்க அனுமதி கேட்டபோது,அவரை வாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.


இருப்பினும், இப்படத்தின் ஆரம்பகட்ட உருவாக்கம் குறித்து வெளியான இயக்குநர் லோகேஷின் பழைய நேர்காணல்களில்,மன்சூர் அலி கானை மனதில் வைத்தே டில்லி கதாபாத்திரம் எழுதப்பட்டதாகவும்,தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் முயற்சியால் கதை கார்த்தியிடம் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ,ஒரு நடிகர் தவறவிட்ட வாய்ப்பு மற்றொரு நடிகரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியாக மாறுவதுதான் சினிமாவின் சுவாரஸ்யம்!

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.