வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இப்ப வரை இந்த டாப் ஹீரோவுடன் ஜோடி சேராத 5 நடிகைகள்.. விஜய் ஓகே அஜித்துடன் நடிக்க மாட்டேன்

சினிமாவில் என்னதான் முன்னணி நடிகையாக மக்கள் மனதில் முத்திரையை பதித்திருந்தாலும் சில நடிகர்களுடன் மட்டும் தான் ஜோடி சேர்ந்து நடிக்க முடிந்தது. அதிலும் இப்பொழுது வரை முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர்களுடன் ஜோடி சேராமலே சில நடிகைகள் போய்விட்டார்கள். அதிலும் ஒரு நடிகை விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறேன். அஜித் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று மறுத்திருக்கிறார். அப்படிப்பட்ட நடிகைகள் யார் என்று பார்க்கலாம்.

சினேகா: 90ஸ் காலத்தில் புன்னகை அரசியாக வலம் வந்த சினேகா அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். விஜய்யுடன் வசீகரா, கமலுக்கு ஜோடியாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் மற்றும் அஜித்துக்கு ஜோடியாக ஜனா போன்ற முன்னணி ஹீரோகளுடன் நடித்து வந்த இவர் ரஜினி உடன் மட்டும் ஜோடி சேராமல் போய்விட்டார். சூப்பர் ஸ்டாருடன் போட்டி போட்டு நடிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் அந்த நேரத்தில் ரொம்பவே பாப்புலராக இருந்த இவர் ஏன் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றால் எந்த இயக்குனர்களும் இவர்களை ஜோடி சேர்ப்பதற்கு ஆசைப்படவில்லை என்றே சொல்லலாம். ஆனாலும் இந்த வருத்தம் சினேகாவிற்கு ரொம்பவே இருக்கிறது.

Also read: சினேகா எப்படி பட வாய்ப்புகளை பெற்றார்.. வேறென்ன இப்படித்தான் என நக்கல் அடிக்கும் பயில்வான்.!

ரோஜா: இவர் ரஜினி, கமல் சினிமாவின் வளர்ந்து வந்த காலத்தில் முன்னணி ஹீரோயினாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதில் இவர் ரஜினியுடன் நடித்த உழைப்பாளி மற்றும் வீரா போன்ற படங்கள் வெற்றி படமாக தான் இவர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆனால் இவர் கமலுடன் மட்டும் ஜோடி சேர்ந்து எந்த படங்களில் நடிக்கவில்லை. இதை பற்றி இவரிடம் கேட்டபோது கமல் படத்தில் முத்தக் காட்சிகளைத் தவிர வேறு என்ன இருக்கும் என்று ஒரு முறை அவரை கூறுகிறார். அதனாலேயே கமலுடன் நடிப்பதை தவிர்த்து விட்டார்.

லைலா: இவர் விக்ரம், சூர்யா, அஜித் போன்ற முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். இப்படி நடித்த இவர் விஜய் உடன் ஒரு படத்தில் கூட ஜோடி சேரவில்லை. ஆனாலும் விஜய்க்கும் இவருக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. அதாவது உன்னை நினைத்து படத்தில் சூர்யாவுக்கு பதில் முதலில் விஜய் தான் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். அதில் லைலா விஜய் உடன் ஜோடியாக இருக்கும் சீன்களை வைத்து எடுத்து இருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பின்னர் தான் விஜய் இந்த படத்தில் இருந்து விலகியதனால் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

Also read: செட்டாகாது ஹீரோக்களுடன் நடித்த கேரியரை தொலைத்த லைலா.. வாய்ப்பில்லாமல் போக காரணமாக இருந்த 5 படங்கள்

ஸ்ரேயா: இவர் விஜய், விக்ரம் மற்றும் பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார். பின்பு அஜித் உடன் ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால் இவருக்கு அஜித்துடன் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. அதற்கு இவர் அஜித் கூட என்னால் நடிக்க முடியாது எனக்கும் அவருக்கும் செட்டே ஆகாது என்று நடிக்க மறுத்து விட்டார். அதே நேரத்தில் விஜய் கூட வாய்ப்பு வந்த பொழுது இவருக்கு ஜோடியாக நடிக்கிறேன் என்று நடித்த படம் அழகிய தமிழ் மகன். பின்பு கடைசிவரை அஜித்துடன் ஜோடி சேராமல் போய்விட்டார்.

தேவயானி: விஜய், அஜித், பிரசாந்த் மற்றும் சூர்யா இவர்கள் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருந்த காலத்தில் விஜய்யுடன் பிரண்ட்ஸ் படமும், அஜித்துக்கு ஜோடியாக நீ வருவாய் என, பிரசாந்துக்கு ஜோடியாக அப்பு என்று நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக இவருக்கென்று தனி இடத்தை பிடித்தார். ஆனால் சூர்யாவுடன் மட்டும் ஜோடி சேராமல் போய்விட்டது. ஆனால் இவர்கள் இணைந்து பிரண்ட்ஸ் படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் அதில் சூர்யாவும் இவரும் எதிரும் புதிருமாக தான் நடித்தார்கள். மற்ற எந்த படங்களிலும் ஜோடி போட்டு நடிக்கவில்லை.

Also read: ரீஎண்ட்ரி கொடுக்கும் சீரியல் நடிகர்கள்.. மீண்டும் அழ வைக்க வரும் தேவயானி 

Trending News