வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கமல் போல் வாக்குறுதி கொடுக்கும் விஜய்.. ரெண்டு வருஷத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கப் போகும் தளபதி

Vijay promises As like Kamal: எந்த விதத்திலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்பதற்கு ஏற்ப சொன்னதை நிறைவேற்றும் விதமாக கட்சியை ஆரம்பித்து அதற்கான பெயரையும் வெளியிட்டு விட்டார். தற்போது திரும்புகிற பக்கமெல்லாம் விஜய் அரசியலுக்குள் நுழைந்து கட்சி பெயரை வெளியிட்டது தான் பேசும் பொருளாக இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து வருகிற சட்டமன்றத் தேர்தல் ஆட்சி 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. அதற்குள் கிட்டத்தட்ட இரண்டு வருடம் இருப்பதால் நடிப்பில் எந்த அளவிற்கு உயரத்தை தொட முடியுமோ அதை பெற வேண்டும். அத்துடன் சம்பளத்தை இரட்டிப்பாக ஆக்கி வசூலிலும் லாபத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மும்மரமாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவருடைய 69 ஆவது படமான GOAT படத்தில் நடித்து வருகிறார். தற்போது கட்சியை ஆரம்பித்ததால் இனிமேல் நடிக்க வாய்ப்பில்லை இது தான் கடைசி படம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் இன்னும் எலக்சனுக்கு இரண்டு வருடங்கள் இருப்பதால் அதற்குள் எத்தனை படத்தில் நடித்து சம்பாதிக்க முடியுமோ அதை செய்து விட வேண்டும் என்று ஒரு பக்கம் நினைக்கிறார்.

Also read: மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடங்கி தளபதி விஜய் வரை.. இதுவரை கட்சி ஆரம்பித்த 11 நடிகர்கள்

காரணம் எலக்சன் வந்துவிட்டால் பணத்தை வாரி இறைக்க வேண்டும். அதற்கு என்னதான் பணம் குவிந்திருந்தாலும் கட்டுப்படியாகாது என்பதனால் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக்க வேண்டும் என்பதற்காக அட்லி, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஆர்ஆர்ஆர் புரொடக்சன் தயாரிப்பில் படத்தை பண்ணுவதற்கு மும்மரமாக செயல்பட்டு வருகிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் எலக்சன் வேலையும் பார்க்க வேண்டும் என்பதற்காக கிடைக்கிற கேப்பில் அதற்கு தகுந்த மாதிரி சில வேலைகளையும் பண்ணி வருகிறார். அடுத்ததாக 2026 க்கு பிறகு அரசியலில் ஜெயித்து முதலமைச்சராக ஆகிவிட்டால் முழு கவனமும் அரசியல் மீதுதான் இருக்கும் நடிக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

அப்படி இல்லை என்றால் அடுத்து தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்துவேன் என்று சொல்லி இருக்கிறார். இதே மாதிரி தான் கமலும் வாக்குறுதி கொடுத்தார். தற்போது இவரைப் போலவே விஜய்யும் களத்தில் இறங்கி இருக்கிறார். அத்துடன் இவர் அரசியல் கட்சியை அறிவித்த பிறகு ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான மக்களும் தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை. வாரிசு இல்லா அரசியல், குழப்பம் இல்லாத கூட்டணி தமிழகத்திற்கு வேண்டும். அதனால் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று விஜய்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: அரசியல் பொழுதுபோக்கு அல்ல, என் ஆழமான வேட்கை.. மக்கள் பணிக்காக நடிப்புக்கு முழுக்கு போடும் விஜய்

Trending News