வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எம்ஜிஆர், ரஜினி வரிசையில் விஜய்யை போடலனா கண்டமேனி திட்டுவாரு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பிரபலம்

சினிமாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு ஹீரோக்கள் இடையே எப்போதுமே கடுமையான போட்டி நிலவி வரும். அந்த வகையில் 60,70களில் எம்ஜிஆர், சிவாஜி தான் பெரிய நடிகர்களாக பார்க்கப்பட்டார்கள். இவர்களது படம் தான் அப்போது அதிக வசூல் செய்து வந்தது.

இவர்களைத் தொடர்ந்து ரஜினி, கமல் இடையே போட்டி நிலவியது. இப்போதே காலகட்டத்தில் விஜய், அஜித்திடையே கடுமையான போட்டி நிலவு வருகிறது. ஆனால் இவர்களுக்கு அடுத்ததாக தனுஷ், சிவகார்த்திகேயன் என்று கூறப்பட்டாலும் விஜய், அஜித் ரசிகர்கள் தான் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Also Read : மேடையில உளரும் போதே தெரிஞ்சது, வாரிசு முழுக்க முழுக்க அந்த மாதரி படம்.. குண்டத்தூக்கி போட்ட விஜய்யின் ப்ரோ!

சாதாரணமாக பத்திரிகைகளில் எழுதும்போதே எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் என்று தான் குறிப்பிடப்படும். அப்படி பார்க்கையில் எம்ஜிஆர், ரஜினி, விஜய் ஆகியோருக்கு தான் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக சிலர் கருதுகிறார்கள். இது பற்றி வலைப்பேச்சு பிஸ்மி ஒரு செய்தி கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்திருந்தார். இதனால் அவரது அலுவலகத்திற்கு சென்று ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டனர். இந்த பிரச்சனை இப்போது தான் சற்று அடங்கியுள்ளது. அதற்குள் அடுத்த ஒரு சர்ச்சையில் பிஸ்மி சிக்கி உள்ளார்.

Also Read : நீங்க ஜேம்ஸ் பாண்டாக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது.. விஜய்க்கு அட்வைஸ் செய்த பிரபலம்..

அதாவது இவர் தனது வலைப்பேச்சு யூடியூப் சேனலில் சினிமா குறித்து புதிய அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். அப்படி இருக்கையில் சில நேரங்களில் அஜித், விஜய் என்று கூறிவிட்டால் உடனே விஜயிடம் இருந்த போன் வருமாம். அதாவது முதலில் விஜய் பேரை தான் கூற வேண்டும் என்ற சொல்லுவார்கள். ஏனென்றால் அந்த முதல் இடத்திற்கு ஒரு மதிப்பு உள்ளது.

அதாவது விஜயை முதலில் கூறினால் அது எம்.ஜி.ஆருக்கான இடம். அடுத்ததாக வரும் ஹீரோ எம்ஜிஆரை விட ஒருபடி கீழே என்பது போல. அப்படிதான் சூப்பர் ஸ்டார் இடத்திற்கும் பலரும் ஆசைப்படுவார்கள். அதுவே உலகநாயகன் என்று சொன்னால் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். அதனால் தான் விஜய் எப்போதுமே முதலில் இருக்க ஆசைப்படுகிறார் என பிஸ்மி கூறியுள்ளார்.

Also Read : எஸ்ஏசியை விஜய் ஒதுக்க இதுதான் காரணம்.. இந்த வயசிலையும் தளபதிகிட்ட அத எதிர்பார்த்தது தப்பு

Trending News