Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கமலிடம் வேண்டுகோள் வைத்த விஜய் சேதுபதி.. இப்படி ஒரு ஆசையா!

கமலிடம் வேண்டுகோள் வைத்த விஜய் சேதுபதி.. இப்படி ஒரு ஆசையா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதேபோல் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதேபோல் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடைந்த நிலையில் விக்ரம் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் திரைத்துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த மேடையில் பேசிய விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் இடம் கமலின் படத்தில் நான் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். முதலில் மறுத்த லோகேஷ், அதன்பிறகு விஜய்சேதுபதிக்கு வாய்ப்பளித்த உள்ளார்.

அதிலும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஒரு மாறுபட்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த விழா மேடையிலேயே கமலிடம் விஜய்சேதுபதி ஒரு கோரிக்கை வைத்துள்ளார். உலகநாயகன் கமலஹாசனுடன் நடிப்பேன் என்று நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை.

அது தற்போது நடந்துள்ளது.மேலும் எனக்கு வாய்ப்பளித்த லோகேஷ்க்கு நன்றி என விஜய் சேதுபதி கூறினார். அதன் பிறகு கமலஹாசன் இயக்கத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும், அவர் சொல்லிக் கொடுத்து நான் நடிக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். கமலஹாசன் தான் கடைசியாக நடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி இருந்தார்.

தற்போது கமலஹாசன் படத்தில் நடிப்பு மற்றும் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அடுத்ததாக பா ரஞ்சித் படத்தில் கமலஹாசன் நடிக்க உள்ளார். மேலும் விஜய் சேதுபதியும் பல இந்தி படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் இப்போது கமல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பது கடினமான ஒன்று. ஆனால் வரும் காலங்களில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.