வாலி, குஷி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் S.J.சூர்யா. இவர் இயக்கம் மட்டுமின்றி நடிகராவும் அறிமுகமாகி நீயூ, அன்பே ஆருயிரே, இசை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் வியாபாரி, திருமகன், கள்வனின் காதலி என்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்தில் வில்லன் மாதிரியான நெகடிவ் ரோலில், இவர் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் என்ற படத்தில் சாவைப் பார்த்து சந்தோஷப்படும் சைகோ வில்லனாக மிரட்டியிருப்பார். பின்னர் மெர்சல், மாநாடு போன்ற படங்களில் வில்லனாக அற்புதமாக நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார். ஹாலிவுட் வில்லன்கள், பாலிவுட் வில்லன்கள் மத்தியில் கோலிவுட் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா அவதாரம் எடுத்து அடுத்த ஒரு ரவுண்ட் வர தொடங்கிவிட்டார்.
Also Read: விஷால் விஜய்யுடன் திடீரென்று ஒட்டிக்கொண்ட காரணம் இதுதான்
மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் மார்க் ஆண்டனி. 1975லிருந்து 1995 வரையிலான காலகட்டங்களில் வருகிற கதையை டைம் டிராவலை கலந்து புதிய ஜானர் – ல் உருவாகியிருக்கும் படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரனிடம் 10 மணி நேரம் முழு கதையையும் கேட்டு அசந்து போன S.J. சூர்யா நல்ல கதை கண்டிப்பாக தனக்கு மாநாடு 2 என்று சொல்லும் அளவிற்கு இப்படம் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.
ஜிகர்தண்டா 2: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பெயரில் வெளிவர இருக்கும் படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகர்தண்டா 2 (இரண்டாம் பாகம்) மதுரையில் கொடி கட்டி பறந்த ரவுடிகளின் சாம்ராஜ்யத்திற்கு இடையே நடந்த மோதல், கொலைகள் ஆகியவற்றை கதையின் பின்னனி யாக கொண்டு ஜிகர்தண்டா (முதல் பாகம்) வெளிவந்தது. ஜிகர்தண்டா 2 வில் லாரன்ஸ் ராகவேந்திரா கதாநாயகனாக நடிக்கின்றார். S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் படமான இறைவி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் கான்செப்ட், செட், போட்டோகிராபி எல்லாம் பிரம்மாண்டம் என்று கூறி S.J. சூர்யா படப்பிடிப்பு குழுவினரைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். லாரன்ஸை தான் பார்த்த அற்புத உள்ளம் கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: ரெட் ஜெயண்ட்டை மாட்டிவிட்ட லைக்கா.. இந்தியன் 2-வில் இருந்து தப்பிக்க சுபாஸ்கரன் எடுத்த முடிவு
இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் இந்தியன் 2′ கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பிரியா பவானி சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்தில் 7 வில்லன்கள் சமுத்திரகனி, பாபிசிம்ஹா, குரு சோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர் மற்றும் சிவாஜி குருவாயூர் என்று கூறப்பட்ட நிலையில், இந்த படத்தின் மெயின் வில்லனாக S.J.சூர்யா நடிக்கிறார் என்ற சீக்ரெடை போட்டு உடைத்துள்ளனர். வாலி குஷி போன்ற மாஸ் ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் இப்போது மாஸ் ஹீரோ வில்லனாகிறார். இப்படத்திற்கு அவர் மிகப்பெரிய தொகையை சம்பளமாகப் பெற்றுள்ளார். அதே போல் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் என்ற படத்திலும் S.J. சூர்யா தான் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68: வெங்கட்பிரபு இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் தளபதி 68. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்றும் N கூறியுள்ளனர். நண்பன் படத்துலும் வாரிசு படத்திலும் கெஸ்ட் ரோலில் கலக்கிய S.J. சூர்யா, மெர்சல் திரைப்படத்தில் முழு வில்லனாக மிரட்டியிருப்பார். தற்போது இவரே தளபதி 68 படத்திற்கும் வில்லனாக தேர்வாகியுள்ளார். வெங்கட்பிரபு படமான மாநாடு படத்தில் இவரின் வில்லன் நடிப்பு சிறப்பாக பேசப்பட்ட நிலையில் தளபதி 68 படத்திலும் S.J. சூர்யாவையே வில்லனாக்கினார் வெங்கட் பிரபு.
Also Read: அட இதுதான் சங்கதியா.? கேப்டன் மில்லருக்கு டாட்டா போட்டு மும்பையில் வட்டமிடும் தனுஷ்
D50: நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளார் தனுஷ். தனுஷின் 50வது படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. D50 படத்தில் த்ரிஷா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் S.J.சூர்யா சந்தீப் கிஷன் இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்கின்றனர். S.J.சூர்யாவின் கதாபாத்திரத்தை இப்படத்தின் வில்லனாக உருவாக்கியுள்ளனர். இந்த படத்திலும் தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விடுவார் S.J.சூர்யா.