வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வரிசையாக தோல்வி இருந்தும் நிக்ககூட நேரம் இல்லாத விஜய் சேதுபதி.. கைவசம் இத்தனை படங்களா?

விஜய்சேதுபதி ஆரம்ப காலங்களில் நடித்த படங்களில் அவரது முகத்தை கண்டுபிடிப்பது மிகக் கடினம். ஏனென்றால் பெரும்பாலும் கும்பலாக இருக்கும் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன் பின்பு கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை விஜய் சேதுபதி பிடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஹீரோவாக தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பெரும்பான்மையான ஹீரோக்கள் தயங்குவார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் சற்றும் யோசிக்காத விஜய் சேதுபதி வில்லனாகவும் கலக்கி வருகிறார்.

Also Read :விஜய்சேதுபதி அஸ்திவாரம் போட்ட 5 படங்கள்.. இப்பவும் பீல்ட் அவுட் ஆகாததற்கு இதான் காரணம்

தற்போது விஜய் சேதுபதியை எடுத்துக்காட்டாக கொண்டு பல ஹீரோக்கள் வில்லனாக நடிக்க தொடங்கி உள்ளனர். இந்நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் வருஷத்திற்கு 10 படங்களாவது வெளியாகிறது. இப்போது நிற்க கூட நேரம் இல்லாத அளவிற்கு கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. இதைத்தொடர்ந்து கத்ரீனா கைப் உடன் விஜய்சேதுபதி இணைந்து மேரி கிறிஸ்மஸ் என்ற பாலிவுட் படத்தில் நடிக்கிறார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் புஷ்பா 2 படத்தை தவிர்த்துவிட்டு அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

Also Read :10 வருடங்கள் ஆகியும் விஜய் சேதுபதி நடிக்க ஏங்கும் 2 படங்கள்.. தமிழ் சினிமா அடையாளம் கண்ட ஹீரோ

மேலும் வெற்றிமாறனின் விடுதலை, ரஞ்சித் ஜெயக்கோடியின் மைக்கல், சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல், கிஷோர் பாண்டுரங் இயக்கத்தில் காந்தி டால்க்ஸ், வெங்கட் கிருஷ்ணாவின் யாதும் ஊரே யாவரும் கேளிர், மிஸ்கினின் பிசாசு 2 ஆகிய படங்களை விஜய்சேதுபதி கைவசம் வைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் தனது 46வது படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் மாநகரம் இந்தி ரீமேக்கிலும் விஜய் சேதுபதியின் நடிக்க இருக்கிறார். இவ்வாறு ஓயாமல் இவரை திரையில் பார்ப்பதால் மக்கள் கொஞ்சம் எரிச்சல் அடைகின்றனர்.

Also Read :தெரியாம 3வது ஆளாக வந்து மாட்டிக்கிட்டேன்.. ஓவர் டார்ச்சரால் விஜய் சேதுபதிக்கு வந்த தலைவலி

Trending News