வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விக்ரம் படத்தை மனதில் வைத்து விஜய் சேதுபதி கொடுக்கும் டார்ச்சர்.. உச்சகட்ட தலைவலியில் லோகேஷ்

Actor Vijay Sethupathi: மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து இரண்டாவது முறையாக தற்போது லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை எடுத்து முடித்து விட்டார். இந்த படத்திற்கு பிறகு  இப்பொழுது அடுத்து ரஜினிகாந்த் வைத்து ஒரு படம் பண்ண இருக்கிறார். இந்த வருட இறுதியில் இந்த படம் டேக் ஆஃப் ஆகும்.

அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை தற்போது ஆரம்பித்திருக்கும் லோகேஷ்,  அடுத்ததாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தேர்வு செய்து கொண்டிருக்கிறார். இதில் நிச்சயம் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அதனால் விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ்க்கு போன் செய்து அடுத்து ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என டார்ச்சர் செய்து வருகிறாராம்.

Also Read: மூணு மாச கடன் நான்கே நாளில் திருப்பிக் கொடுத்த ரஜினி.. நீங்க கடவுளுக்கும் மேல என புகழும் பிரபலம்

ஏற்கனவே ரஜினியுடன் பேட்ட படத்தில்விஜய் சேதுபதி படத்தில் நடித்த போதிலும் அது நெகட்டிவ் கதாபாத்திரமாக அமைந்து. அதே போல் லோகேஷ் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திலும் சந்தனம் என்ற நெகட்டிவ் கதாபாத்திரம் தான் விஜய் சேதுபதிக்கு அமைந்துவிட்டது.

அதனால் அடுத்து லோகேஷ் இயக்கும் படத்தில் ரஜினியுடன் பாசிடிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என டார்ச்சர் செய்து வருகிறாராம் விஜய் சேதுபதி. இதனால் என்ன கேரக்டர் கொடுக்கலாம் என உச்சகட்ட தலைவலியில் இருக்கிறார்கள் லோகேஷ். விஜய் சேதுபதிக்கு எதிர்மறையான கதாபாத்திரத்தை கொடுக்க வேண்டும் என்று தான் லோகேஷ் நினைத்துக் கொண்டிருந்தார்.

Also Read: 6வது நாளிலும் கொட்டும் பணமழை.. ஜெயிலர் 1000 கோடி தொட்டாலும் அத உடைக்க இவரால மட்டும் தான் முடியும்

ஆனால் இப்போது அது அப்படியே தலைகீழாக மாறிய நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். மேலும் இமயமலை சென்றிருக்கும் ரஜினி விரைவில் வந்த பிறகு அவரை வைத்து விஜய் சேதுபதி சமாதானப்படுத்தி எப்படியாவது நெகட்டிவ் கேரக்டரை அவர் தலையில் கட்டி விடலாம் என்ற ஐடியாவிலும் லோகேஷ் இருக்கிறார்.

ஆனால் இதற்கு முன்பு விக்ரம் படத்தை மனதில் வைத்துக்கொண்டு நிச்சயம் இந்த முறை விஜய் சேதுபதி உஷாராகி விடுவார். சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் ஏற்கனவே விஜய் சேதுபதி, ரஜினி இருவரையும் எதிரும் புதிருமாக பார்த்துவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் நண்பர்களாக நடிப்பதை தான் விரும்புகின்றனர்.

Also Read: சன்னியாசியா போனாலும் சக்க போடு போடும் ஜெயிலர்.. குகைக்குள் பாபா வைரல் புகைப்படம்

Trending News