வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லிப்-லாக் அடிக்க அசால்டாக ஒப்புக்கொண்ட திரிஷா.. வேண்டவே வேண்டாம் என மறுத்த நடிகர்

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகர் யார் என்றால் அது விஜய் சேதுபதி தான். தனக்கு வருகிற அத்தனை படத்தையும் மறுக்காமல் எல்லா படத்துக்கும் கால்ஷீட் கொடுத்து தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி நடிப்பில் உருவான காத்துவாக்குல 2 காதல் படம் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்துள்ளார். மேலும், மாமனிதன், மேரி கிறிஸ்மஸ், சலார் போன்ற பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்துயுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் 2018 இல் வெளியான திரைப்படம் 96. இப்படத்தில் ராமச்சந்திரன், ஜானகி இருவரின் பள்ளி பருவ காதல், 22 வருடங்கள் ஆகியும் அப்படியே இருக்கிறது. பல வருடங்கள் கழித்து சந்திக்கும் போது இவர்களின் காதல் ஞாபகங்கள் அவர்களை என்ன செய்கிறது என்பதே இப்படத்தின் கதை.

இப்படத்தில் விஜய் சேதுபதி ராமச்சந்திரன் ஆக வாழ்ந்து வந்தார். மேலும் இப்படி ஒரு காதல் படத்திற்காகத்தான் தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருந்தனர். அதை அவ்வளவு சிறப்பாக எடுத்து இருந்தார் இயக்குனர். இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவை லிப் லாக் காட்சியில் நடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார் இயக்குனர், த்ரிஷா ஓகே சொல்லிட்டாங்க.

ஆனால் இது நல்ல ஒரு காதல் கதையாக உள்ளது. இதுபோன்ற காட்சிகளை வைத்து இளைஞர்களை கெடுத்துவிட வேண்டாம் என விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விஜய் சேதுபதி சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்காமல் திரிஷாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.

இதனால் 96 படத்தில் லிப் லாக் காட்சி இடம் பெறவில்லை. ஆனால் இதுபோன்ற காட்சிகள் வைத்திருந்தால் படம் இந்த அளவுக்கு பேசப்பட்டு இருக்குமா என்பது சந்தேகம்தான். நல்லவேளை விஜய்சேதுபதி பேச்சைக் கேட்டதால் படம் வேற லெவல் ரீச் ஆனது. இருந்தாலும் திரிஷா உடன் லிப் லாக் காட்சியை தவிரவிட்டுள்ளார் விஜய் சேதுபதி. இதுவே நம்ம தலைவன் சிம்புவாக இருந்தால் பூந்து விளையாடி இருப்பார்.

Trending News