விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். வருடத்திற்கு அசால்டா ஒரு டஜன் படங்கள் கூட நடித்து விடுவார். அந்த அளவுக்கு உழைக்கக்கூடிய மனிதர். எந்த படம், எந்த கதாபாத்திரம் என்றாலும் அசால்டாக நடிக்கக் கூடியவர் விஜய் சேதுபதி.
தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகர்களாக திகழும் சூப்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் இருவரையும் வளர்த்துவிட்ட இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களைத்தான் கமல், ரஜினி இருவரும் தங்களது குரு என சொல்லிப் பெருமைப் படுகின்றனர்.
அதேபோன்று விஜய் சேதுபதியும் சினிமாவில் தனக்கு குரு இவர்தான் என்று தன்னை வளர்த்துவிட்ட வரை இன்றுவரை மறக்காமல் போற்றி வருகிறார். அவர் வேறு யாரும் அல்ல விஜய் சேதுபதியை முதன்முதலாக கதாநாயகனாக நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி.
2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப் படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது. தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தையும் சீனு ராமசாமி தான் இயக்கினார். இந்தப்படமும் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இவ்வாறு ஆரம்பத்தில் விஜய்சேதுபதி வளர்த்துவிட்ட சீனுராமசாமியை தன்னுடைய குருவாக பார்க்கிறார் விஜய்சேதுபதி. மேலும் தன்னுடைய குருவுக்கு ஏதாவது கைமாறு செய்யவேண்டும் என்பதற்காகவே விஜய் சேதுபதி தன்னுடைய 50-வது படத்தை சீனு ராமசாமி தான் இயக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
இதற்கு சீனு ராமசாமியும் நிச்சயம் சம்மதம் தெரிவிக்க, கூடிய விரைவில் இந்தப் படத்தை குறித்த முழு விவரமும் வெளியாகும். சமீபத்தில் சீனுராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணியில் வெளியான மாமனிதன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.