திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் சேதுபதியின் நிறைவேறாத ஆசை.. வெளிப்படையாக பேட்டியில் கூறிய சம்பவம்

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் டிஎஸ்பி. இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு பெறாமல் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் திரையரங்குகளில் கூட்டமே இல்லையாம். ஆனால் அதற்குள்ளாகவே படம் வெற்றி பெற்றதாக டிஎஸ்பி படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி தன்னுடைய ஆசையை பற்றி கூறியுள்ளார். அதாவது விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் நடித்து வருகிறார். பொதுவாக பெரிய ஹீரோக்கள் மற்ற நடிகர்களின் படத்தில் தயங்குவார்கள்.

Also Read : மீண்டும் சந்தனமாக நடிக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

ஆனால் அதுக்கு விதிவிலக்காக உள்ளார் விஜய் சேதுபதி. இதனால்தான் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு சமீபகாலமாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் பேசப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

தற்போது சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பார்க்கப்படுவது விஜய் சேதுபதி தான். ஏனென்றால் இந்த இரு நடிகர்களும் சினிமா பின்புலம் இல்லாமல் தன்னுடைய திறமையால் இந்த உயரத்தை அடைந்துள்ளனர். இதுகுறித்து விஜய் சேதுபதி பேசுகையில் சிவகார்த்திகேயன் படத்தில் அவருடைய பிரண்டாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

Also Read : பிளாக்பஸ்டர் ஹிட் பட டீமே இப்படி ஆடல.. வெட்கமே இல்லாமல் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி

மேலும் எங்களிடம் இருப்பது ஆரோக்கியமான போட்டி தான். படங்களில் தான் போட்டிய தவிர நிஜத்தில் எங்களுக்குள் நல்ல நட்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி இவ்வளவு வெளிப்படையாக சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இனி வருங்காலத்தில் விஜய் சேதுபதியின் இந்த ஆசை நிறைவேறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் தற்போது விஜய் சேதுபதி கையில் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார். அடுத்தடுத்த அவரது நடிப்பில் படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளது.

Also Read : 5 வருடமா தயாரிப்பாளர் காசை நாசமாக்கிய விஜய் சேதுபதி.. ஹீரோவாக மண்ணைக் கவ்விய 10 படங்கள்

Trending News