சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

காதல்னா இப்படி பண்ணனும்.. அப்போதைய இளசுகளை கிறுக்கு பிடிக்க வைத்த தளபதியின் 6 படங்கள்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது மாஸ் ஹீரோவாக உள்ள விஜய் ஆரம்ப காலங்களில் உணர்ச்சிகரமான காதல் படங்களில் நடித்துள்ளார். அவ்வாறு விஜய் நடிப்பில் வெளியான ஆறு காதல் படங்களை பார்க்கலாம்.

பூவே உனக்காக: விக்ரமன் இயக்கத்தில் 1996 இல் வெளியான திரைப்படம் பூவே உனக்காக. விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த் நடிப்பில் வெளியான இப்படம் விஜயின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தில் விஜய் தன்னுடைய காதலிக்காக இரு குடும்பங்களுக்கு இடையே ஆன பிரச்சனையை தீர்க்கிறார்.

லவ் டுடே: பாலசேகரன் இயக்கத்தில் 1997இல் விஜய், சுபலட்சுமி, ரகுவரன் நடிப்பில் வெளியான திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் கல்லூரி மாணவனாக இருக்கும் விஜய், கண்டிப்பான போலீஸ் அதிகாரியின் மகள் சுபலக்ஷ்மியை காதலிக்கிறார். இந்த காதலால் விஜய் தன் தந்தையையே இழக்கிறார். அந்தக் காலகட்டத்தில் விஜய் வெற்றிப்படங்களில் லவ்டுடே படமும் ஒன்று.

காதலுக்கு மரியாதை:  ஃபாசில் இயக்கத்தில் 1997 இல் விஜய், ஷாலினி, சிவக்குமார், ராதாரவி நடிப்பில் வெளியான திரைப்படம் காதலுக்கு மரியாதை. இரு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த விஜய், ஷாலினி இருவரும் காதலிக்கிறார்கள். பிறகு, குடும்பத்திற்காக பிரிய நினைக்கும் இவர்களின் காதலை உணர்ந்து இரு குடும்பமும் சேர்த்து வைக்கிறார்கள்.

துள்ளாத மனமும் துள்ளும்: எழில் இயக்கத்தில் 1999 இல் வெளியான திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இப்படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் குட்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் விஜய் ரசிகர்கள் கவனம் பெற்றார். ருக்மணி ஆக சிம்ரன் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் ஹிட்டானது.

குஷி: எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் 2000 ஆண்டு வெளியான திரைப்படம் குஷி. விஜய், ஜோதிகா, விஜயகுமார் ஆகியோர் இப்படத்தில் நடித்து இருந்தனர். ஒரே கல்லூரியைச் சேர்ந்த இருவரும் ஈகோ காரணமாக காதலை ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் இவர்களுக்குள் இருக்கும் காதல் கடைசியில் இவர்களை இணைக்கிறது.

சச்சின்: ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 2005ல் வெளியான திரைப்படம் சச்சின். விஜய், ஜெனிலியா, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் கவலையற்ற இளைஞனாக உள்ள விஜய் ஜெனிலியாவை பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே விழுகிறார். விஜய்யின் வித்தியாசமான பரிமாணத்தில் உருவான இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

Trending News