Vijay Tv Upcoming New Serial: சின்னத்திரையை பொறுத்தவரை எத்தனையோ சேனல்கள் இருந்தாலும் அவர்களது டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடத்தை பிடிப்பது சீரியல்கள் தான். அந்த வகையில் குடும்பங்களை கவரும் வகையில் புத்தம் புது சீரியல்களை அடிக்கடி ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடத்தை பிடித்து விடுகிறார்கள். இதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் சேனல் தற்போது போட்டி போட்டு கொண்டு வருகிறது.
ஆனாலும் எத்தனை சேனல்கள் புதுப்புது சீரியல்களை கொண்டு வந்தாலும் எனக்கு கவலை இல்லை என கெத்து காட்டி சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து விட்டது. அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது விஜய் டிவி. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கும் பலரும் அடிமையாகி விட்டார்கள். அதனாலேயே இவர்களுடைய முழு நோக்கம் மக்களை கவரும் வகையில் கதையே கொண்டு வருவது தான்.
அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருப்பது சிறகடிக்கும் ஆசை, ஆகா கல்யாணம், பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் மோதலும் காதலும். இப்படி ஒரு சில நாடகங்கள் மக்களின் பேவரிட் நாடகமாக மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்து மக்களை இன்னும் ஈர்ப்பதற்காக புத்தம்புது சீரியலை களம் இறக்கப் போகிறார்கள்.
அதாவது வால்தனத்தைக் காட்டி குறும்பு பண்ணும் பள்ளிக்கூடத்து மாணவி தமிழ்ச்செல்வி, படிப்பிலும் குறும்பிலும் முதல் இடத்தை பிடித்து விடுகிறார். அப்படிப்பட்ட இவருடைய கனவை நோக்கி பயணிக்கும் பொழுது பெரிய இடத்து சம்பந்தம் வருகிறது என்று வீட்டில் திடீரென்று மாப்பிள்ளை பார்த்து கல்யாண வேலை நடக்கிறது. இதன்படி ஒரு ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு சின்ன மருமகள் என்ற புது நாடகத்தை கொண்டு வருகிறார்கள்.
இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் தயவு செய்து எப்படி மொக்க கதையினாலும் எடுங்க. ஆனால் ரெண்டு பொண்டாட்டி கதையை மட்டும் எடுக்காதீங்க ப்ளீஸ் என்று அனைவருமே கமெண்ட்ஸில் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவிக்கும் வகையில் கெஞ்சிக் கொண்டு வருகிறார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு விஜய் டிவி சீரியல் மூலம் மக்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதனுடைய தாக்கம் தான் இவர்களுடைய கமெண்ட்ஸ் மூலம் தெரிகிறது. மேலும் என்னதான் விஜய் டிவியில் நாடகங்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் இன்னொரு புது சீரியலை கொண்டு வந்து பார்ப்பவர்களை பரிதாபமாக ஆக்கி விடாதீர்கள். மேலும் இதில் ஹீரோயினாக வரும் தமிழ்ச்செல்வி-யின் அம்மாவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரை வருகிறார்.
Also read: சைடு கேப்பில் மகனுக்கு தோள் கொடுக்கும் பூமர் அங்கிள்.. பாக்யாவை ஓவர் டேக் செய்யும் கோபி