
Sun TV-Vijay TV: சின்னத்திரை சேனல்களில் சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் தான் பனிப்போர் நடந்து வருகிறது. டிஆர்பியில் நீயா நானா என இரண்டு சேனல்களும் போட்டி போட்டு வருகின்றன.
அதில் விஜய் டிவியில் நடித்து வந்த ஆலியா மானசா, சஞ்சீவ், கேபிரில்லா என பலர் சன் டிவி பக்கம் நடையை கட்டி விட்டனர். அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பில்லராக இருந்த வெங்கடேஷ் பட் சன் டிவிக்கு வந்தார்.
அவருடன் சேர்த்து முக்கிய பிரபலங்களும் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சிக்கு தாவினார்கள். அது மட்டும் இன்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலைக்கு பிரியங்காவால் மன வருத்தம் ஏற்பட்டது.
விஜய் டிவியில் இருந்து வெளியேறிய பிரபலம்
அதை அடுத்து வெளிப்படையாகவே தன் எதிர்ப்பை காட்டிய அவர் இப்போது ஜீ தமிழ் சேனலுக்கு தொகுப்பாளினியாக சென்றுவிட்டார். இப்படியாக விஜய் டிவி அடுத்தடுத்து அடிவாங்கி வருகிறது.
இந்த சூழலில் விஜய் டிவியில் இருந்து மற்றொரு பிரபலம் சன் டிவிக்கு இடம் மாறி இருக்கிறார். பாடகியும் குக் வித் கோமாளி பிரபலமான சிவாங்கி தான் அது.
தற்போது பெரிய திரையிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டும் இன்றி சோசியல் மீடியாவில் புது அவதாரம் எடுத்துள்ளார்.
இப்படி தனக்கான அடையாளத்தை உருவாக்கி வந்த இவர் சன் டிவியில் தொகுப்பாளினியாக மாறியுள்ளார். குழந்தைகளை மையப்படுத்தி வர இருக்கும் நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்க இருக்கிறார்.
அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த அனைவரும் சிவாங்கிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.