திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

1200 எபிசோடுகளை கடந்த சூப்பர் ஹிட் சீரியல்களை ஊத்தி மூடிய விஜய் டிவி.. ஏப்ரலில் அடுத்தடுத்து நிறைவடையும் 4 சீரியல்கள்

டிஆர்பி-யில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழுக்கும் இடையே கடும் போட்டி நிலவு வருகிறது. இதனால் சமீபத்தில் டல் அடிக்கும் சீரியல்களை எல்லாம் அவசர அவசரமாக விஜய் டிவி நிறைவு செய்து வருகிறது. ஆனால் இப்போது 1200 எபிசோடுகளை கடந்த சீரியலும் கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஹிந்தியில் ‘என் கணவன் என் தோழன்’ என்ற டைட்டிலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியலை, அப்படியே தமிழ் நடிகர், நடிகைகளை வைத்து விஜய் டிவியில் ராஜா ராணி 2 என்ற சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் டெலிகாஸ்ட் ஆகிறது. இந்த சீரியலில் சந்தியா என்ற கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருந்த ஆலியா மானசா கர்ப்பமாக இருந்ததால், சீரியலில் இருந்து விலகினார்.

Also Read: சுக்கு நூறாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. ஜீவாவை தொடர்ந்து தலை முழுகிய அடுத்த தம்பி

அதன் பிறகு அவருக்கு பதில் ரியா மீண்டும் சந்தியாவாக நடித்தார். அதன்பின் அவரும் விலகியதால் இப்போது ஆஷா கௌடா, சந்தியாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி 3 முறை கதாநாயகிகளை மாற்றியதால், துவக்கத்தில் சின்னத்திரை ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு இப்போது கிடைக்காமல் போனது. இதனால் டிஆர்பி-யிலும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சீரியலின் கிளைமேக்ஸ் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இதில் வில்லியாக காட்டப்படும் அர்ச்சனா தன்னுடைய குழந்தையை மாற்றிய பித்தலாட்டத்தை அவரே ஒத்துக் கொண்டதால், கொஞ்சம் கொஞ்சமாக அவரை நல்லவராக காட்டிக் கொண்டிருக்கின்றனர். மேலும் பார்வதியின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த விக்கியை சந்தியாவின் மாமியார் சிவகாமி கொள்வது என பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் ஏப்ரல் மாதத்திலேயே நிறைவுக்கு வரும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Also Read: எலும்பும், தோலுமாய் மாறிய ரோபோ சங்கர், காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த மனைவி!

ராஜா ராணி 2 சீரியலை தொடர்ந்து டிஆர்பி-யில் டாப் இடத்தை பிடித்துக் கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் முடியப் போகிறது. இதில் நான்கு அண்ணன் தம்பிகளும் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போது ஜீவா மற்றும் கண்ணன் இருவரும் தங்களுடைய மனைவிகளுடன் தனிக்குடுத்தனம் சென்று விட்டனர்.

இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், இறுதியாக 4 அண்ணன் தம்பிகளையும் மறுபடியும் ஒன்று சேர்த்து வைத்துவிட்டு இந்த சீரியலை நிறைவு செய்ய போகின்றனர். அதேபோன்று 600 எபிசோடுகளை கடந்த காற்றுக்கென்ன வேலி மற்றும் 400 எபிசோடுகளை தாண்டிய தமிழும் சரஸ்வதியும் சீரியலும் நிறைவடைய போகிறது. இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகளும் பரபரப்பாக சென்று கொண்டிருப்பதால் இந்த மாத இறுதியில் நிறைவடையும்.

Also Read: 6 வருடங்கள் கழித்து காதலனை கரம் பிடித்த ரோஜா சீரியல் பிரியங்கா.. ட்ரெண்டாகும் போட்டோஸ்

இவ்வாறு ராஜா ராணி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ், காற்றுக்கென்ன வேலி, தமிழும் சரஸ்வதியும் போன்ற 4 சீரியல்களும் ஒரே மாதத்தில் முடிவடைவதால் அடுத்தடுத்து புத்தம் புது சீரியல்களையும் விஜய் டிவி ரெடியாக கையில் வைத்திருக்கிறது. விக்ரம் வேதா, கல்யாணம் போன்ற அதிரடியான புது சீரியல்களையும் விஜய் டிவி களம் இறக்கி டிஆர்பி-யை தும்சம் செய்ய காத்திருக்கிறது.

Trending News