இந்த வாரம் முழுவதும் சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர் என்பதை அந்த வாரத்தின் டிஆர்பி ரேட்டிங்கை வைத்த தெரிந்துவிடும். இந்நிலையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் தற்போது இணையத்தில் வெளியாகி சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
இதில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து டிஆர்பி-யில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருந்த சன் டிவியின் கயல் சீரியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் அதிரடி திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாரம் முதல், விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் கொஞ்சம்கூட எதிர்பாராத அதிரடி ட்விஸ்ட் அரங்கேறியது.
இதில் பாக்யாவிற்கு கோபியின் கள்ளக்காதலி ராதிகா தான் என தெரிந்ததும், பொறுமையை இழந்து எரிமலையாக வெடித்தார். இதைத்தான் ரசிகர்களும் இவ்வளவு நாள் பார்ப்பதற்கு காத்திருந்தனர். ஆகையால் ஒரே வாரத்தில் டிஆர்பி-யில் மெகா ஹிட் கொடுத்து முதலிடத்தை பாக்கியலட்சுமி பிடித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் சன் டிவியின் கயல் சீரியல் 2-ம் இடத்தைப் பெற்றிருக்கிறது.
3-வது இடம் அண்ணன்-தங்கை பாசப் போராட்டத்தை அழகாக காண்பித்துக் கொண்டிருக்கும் சன்டிவியின் வானத்தைப்போல சீரியலுக்கும், 4-வது இடம் இரண்டு மனைவியை ஒரே ட்ராக்கில் ஒட்டிக்கொண்டிருக்கும் சுந்தரி சீரியலுக்கும் கிடைத்துள்ளது.
அத்துடன் ரொமான்டிக் சீரியலாக ரசிகர்களின் மனதை கவர்ந்த ரோஜா சீரியல் 5-வது இடத்தையும், தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் மகள் அந்தப் பாசம் கணவர் மூலமாக கிடைப்பதை காண்பிக்கும் கண்ணான கண்ணே சீரியலுக்கு 6-வது இடம் கிடைத்திருக்கிறது.
முன்பு டிஆர்பி-யில் டாப்-5 இடத்தை பெறும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், நான்கு அண்ணன் தம்பிகள் சேர்ந்து கூட்டுக்குடும்பமாக வாழ்வதை காண்பித்து, அதன் பிறகு ஏதாவது ஒரு தம்பி வீட்டை விட்டு வெளியேறி அதன் பிறகு வீட்டிற்குள் வருவது போன்ற கதைக்களத்தை திரும்பத் திரும்ப செய்வதால் சின்னத்திரை ரசிகர்களுக்கு இந்த சீரியல் சலித்துப் போய் விட்டது.
இதனால் டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளப்பட்டு 7-வது இடத்தைப் பெற்றிருக்கிறது. 8-வது இடம் விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இதில் சீரியலின் இயக்குனர் ஸ்கிரிப்ட்டை எழுதும்போது வேறு உலகத்திற்கு சென்று விடுவார் போல, அந்த அளவிற்கு முக்கியமான கதையை விட்டுவிட்டு, முன்பு இருதய மாற்று அறுவை சிகிச்சை தற்போது வயதான தம்பதி என சீரியலை டல்லடிக்கும் செய்திருப்பதால் டிஆர்பி யில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
இதைத்தொடர்ந்து 9-வது இடம் சன் டிவியில் 4 அக்கா தங்கச்சியின் போராட்டமான வாழ்க்கையை காண்பித்துக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் பெற்றிருக்கிறது. இந்த சீரியல் சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது என்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதேபோன்று 10-வது இடம் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் மாமியாருக்கு ஏற்ற மருமகள் என்ற பெயரை சரஸ்வதி பெற்ற நல்ல மருமகளாக சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் யாரும் எதிர்பாராத அதிரடி மாற்றம் ஏற்பட்டு ரசிகர்களும் சுவாரசியமான அதிரடி திருப்பங்கள் நிறைந்த சீரியல்களை தான் விரும்புகிறார்கள் என்பதை காட்டியுள்ளது.