வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தவறவிட்ட விஜய் டிவி.. போட்டி போட்டு களமிறங்கும் இரண்டு புது சீரியல்கள்

Vijay Tv New Serials: விஜய் டிவியில் எத்தனை நாடகங்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு தான் முதலிடம் என்பதற்கு ஏற்ப எப்பொழுதுமே சிம்ம சொப்பனமாக இருக்கிறது. ஆனாலும் விஜய் டிவி கொஞ்சம் கூட சலிப்பாகாமல் தொடர்ந்து புது சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நாளை முதல் சின்ன மருமகள் மற்றும் தங்கமகள் போன்ற இரண்டு சீரியல்கள் வர இருக்கிறது.

சின்ன மருமகள் கதையானது பள்ளிக்கூடம் படிக்கும் ஒரு மாணவியின் கனவை சுக்கு நூறாக உடைத்து விட்டு பணம் வசதிக்காக தன் பெற்ற மகளான தமிழ் செல்வியை திருமண பந்தத்திற்குள் தள்ளி விடுகிறார்கள். இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தமிழ்ச்செல்வி கல்யாணம் நடக்கும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி இன்னும் நான் மேஜர் ஆகவில்லை.

ஆனால் எனக்கு வலுக்கட்டாயமாக கல்யாணம் நடக்கப் போகிறது என்று போலீசருக்கு தகவலை கொடுத்து விடுகிறார். இதனால் போலீசார் இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்துவதற்காக திருமணம் நடக்கும் அந்த சமயத்திற்கு வந்து விடுகிறார்கள். வந்ததும் இதற்கு முழுக்க காரணமாக இருக்கும் அந்த ஹீரோவின் அப்பாவை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகிறார்கள்.

Also read: குணசேகரனுக்கு எமனாக நிற்கப்போகும் கதிர்.. என்ட்ரி கொடுக்கும் ஜீவானந்தம், தலைகீழாக மாறும் எதிர்நீச்சல்

இதற்கிடையில் எல்லாமே எனக்கு என் அப்பா தான் என்று மொத்த பாசத்தையும் ஹீரோ அப்பா மீது வைத்து வருகிறார். அந்த சமயத்தில் அப்பாவுக்கு இப்படி ஒரு அவமானம் ஏற்பட்டதை பார்த்ததும் இதற்கு காரணமானவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்று சபதம் எடுக்கிறார். அதே நேரத்தில் என் அப்பா ஆசைப்பட்ட மாதிரி இந்த பொண்ணு தான் என் மனைவி நான் தான் உன் கணவர் என்று கூறிவிடுகிறார்.

இவர்களுக்கு மத்தியில் தமிழ்ச்செல்வி திருமணம் நடக்குமா அல்லது அவருடைய கனவு நிறைவேறுமா என்பதை நோக்கி இந்த நாடகம் நாளை இரவு 9:30 மணிக்கு பயணிக்க போகிறது. அடுத்தபடியாக மதியம் 3மணிக்கு தங்கமகள் சீரியல் ஒளிபரப்பாக போகிறது. இந்த நாடகத்தின் கதையானது ஹாசினி பணக்கார பெண்ணாகவும் அப்பாவின் செல்லப் பிள்ளையாக தேவதையாக வளர்ந்து வருகிறார்.

ஆனால் அவ்வப்போது அம்மா மட்டும் பாசத்துடன் கண்டிப்பாகவும் இருக்கிறார். ஹாசினியை பொறுத்தவரை எந்த பிரச்சினை வந்தாலும் பணம் கொடுத்து சமாளித்து விடலாம் என்ற ஒரு எண்ணம். இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஹாசினி ஆல் ஒரு விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் நடுத்தர குடும்பத்தில் இருக்கும் ஒரு குடும்ப தலைவரா ஆன அப்பா இறந்து விடுகிறார். இதனால் அந்த குடும்பத்திற்கு ஒரு சராசரியாக பெண்ணாக போய் எல்லா கஷ்டங்களையும் சரி செய்யும் விதமாக ஹாசினி செய்யும் விஷயங்கள்தான் கதையாக நகரப் போகிறது.

Also read: மகேஷ் பாசத்துக்கு அடிமையாகி காதலில் விழுந்த ஆனந்தி.. கேள்விக்குறியாக நிற்கப் போகும் அன்பு

Trending News