ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

2 நாள் கத்திட்டு மறந்திடுவாங்க.. டிஆர்பி வெறி பிடித்த விஜய் டிவி, மொத்த மானத்தையும் வாங்கிய பிக்பாஸ் 7

Biggboss 7: சின்னத்திரை சேனல்களை பொருத்தவரையில் டிஆர்பிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனாலயே பல சேனல்களும் போட்டி போட்டு நிகழ்ச்சியை இறக்கி வருகின்றனர். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதுமே டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்திருக்கும்.

அதனாலேயே கடந்த ஆறு சீசனும் எதிர்பாக்காத அளவுக்கு வெற்றி பெற்றது. ஆனால் இந்த ஏழாவது சீசன் அது அனைத்தையும் காவு வாங்கி விட்டது. விதிமீறல், போட்டியாளர்களின் மோசமான நடவடிக்கைகள், அவதூறு பேச்சு என இந்த சீசன் மொத்தமும் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் மாயா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விஜய் டிவியும் டிஆர்பி மற்றும் கன்டென்ட்டுக்காக அவரை தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி இந்த பிக்பாஸ் மொத்தமும் ஸ்கிரிப்ட் தான் என்ற சந்தேகமும் ஆடியன்ஸுக்கு இருந்து வருகிறது.

Also read: 40% வாக்குகளை வாரி சுருட்டிய அர்ச்சனா.. கார்ப்பரேட் புத்தியை காட்டும் விஜய் டிவி, பிக்பாஸ் டைட்டிலில் வைத்த ட்விஸ்ட்

அது இப்போது 100% உறுதியாகி இருக்கிறது. அதன்படி விஜய் டிவி ஓவியாவை நிகழ்ச்சிக்கு அழைத்து வரும்போது ஹிந்தி பிக்பாஸில் கலந்து கொண்ட ஷில்பா செட்டியை பார்த்து ஹோம் வொர்க் செய்ய சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் அர்ச்சனாவிடம் ஓவியா போல் நடந்து கொள்ள சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் முந்தைய சீசன் ஐஸ்வர்யா தாத்தா தற்போது விஷ்ணு எல்லோரும் ஹிந்தி பிக்பாஸை தான் காப்பி அடித்து இருக்கிறார்கள். இதற்கு பின்னணியில் விஜய் டிவி தான் இருக்கிறது. அந்த அளவுக்கு டிஆர்பி வெறி பிடித்திருக்கும் சேனல் தரப்பு தற்போது டைட்டில் விஷயத்திலும் தில்லுமுல்லு செய்யப் போகிறார்கள்.

அதிகபட்ச ஓட்டுக்களை வாங்கிய அர்ச்சனாவை ஓரம் கட்டி விட்டு வேறு ஒருவருக்கு இந்த டைட்டில் செல்ல போகிறது. இதனால் நிச்சயம் ஒரு பிரளயம் வெடிக்கும். ஆனால் மக்கள் இரண்டு நாள் கத்திவிட்டு மறந்து விடுவார்கள் என்பது தான் விஜய் டிவியின் கணக்கு. பிரதீப் விவகாரத்தில் கூட இதுதான் நடந்தது.

Also read: 3 லட்சம் வாக்குகளை கைப்பற்றிய அர்ச்சனா.. மாயக்காரியை காப்பாற்ற பலியாடாக போகும் போட்டியாளர் இவர்தான்

Trending News