வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

2 நாள் கதறுவாங்க அப்புறம் மறந்துடுவாங்க.. 100% கார்ப்பரேட் புத்தியை காட்டும் விஜய் டிவி

Vijay tv: கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றாலே தங்களுடைய லாபத்தை மட்டும் தான் பார்ப்பார்கள். அப்படித்தான் தொலைக்காட்சி சேனல்களும் டிஆர்பியை தக்க வைத்துக் கொள்வதற்காக சில அட்டூழியங்களையும் செய்து வருகிறது. அதில் விஜய் டிவியும் விதிவிலக்கல்ல.

போட்டி சேனல்களை காலி செய்ய விஜய் டிவி புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ ஏழு சீசன்களாக வெற்றி நடை போட்டு வருகிறது. ஆனால் இந்த சீசன் தான் ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. எப்போதுமே கமல் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வார்.

ஆனால் இந்த முறை பல விஷயங்களில் அவர் பாராபட்சம் காட்டியதும் மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காததும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அப்படித்தான் பிரதீப் விவகாரத்தில் ஆண்டவர் மீது ரசிகர்கள் இன்னும் கோபத்தில் இருக்கின்றனர்.

Also read: உருவ கேலி, பகிரங்க கொலை மிரட்டல்.. அத்துமீறி பேசிய நிக்சன், டிஆர்பிக்காக மட்டமாக உருட்டும் விஜய் டிவி

அதை அடுத்து இப்போது நிக்சன் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரமும் பகீர் கிளப்பியுள்ளது. அவரை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற உரிமை குரல்களும் இப்போது ஒலிக்க தொடங்கி இருக்கிறது. ஆனாலும் விஜய் டிவி யாருக்கு வந்த விதியோ என இந்த விஷயத்தில் அமைதி காத்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் இதை வைத்து டிஆர்பியை தக்க வைக்கும் யுக்தி தான். அது மட்டுமல்லாமல் இவங்களால என்ன செஞ்சிட முடியும். இரண்டு நாள் கதறுவாங்க. அதுக்கப்புறம் மறந்துட்டு பழையபடி ஷோவ பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. அதனால ரெட் கார்டு எதுவும் தர வேண்டாம் என்பதுதான் அவர்களின் எண்ணம்.

அதே போன்று வார இறுதி நாளான இன்று இந்த விஷயம் பேசப்பட்டாலும் கமல் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்பது தெரிந்த கதைதான். இதற்கு முன்பு வீட்டில் மாயா கோஷ்டி அவ்வளவு அலப்பறை செய்தும் அவர்களுக்கு ஆதரவாக தான் ஆண்டவர் பேசியிருக்கிறார்.

Also read: ஓட்ட வாயை பூர்ணிமாவிடம் போட்டுக் கொடுத்த விஜய் வர்மா.. அநியாயமா ஒரு காதல் ஜோடிய பிரிச்சிட்டீங்களே!

அதுதான் நிக்சன் விவகாரத்திலும் நடக்க இருக்கிறது. இதில் சமூக பொறுப்புக்கோ நீதிக்கோ இடம் கிடையாது. அந்த வகையில் கமலும் இந்த வாரம் விஜய் டிவி கொடுக்கும் ஸ்கிரிப்ட்டை அப்படியே படித்துக் காட்டி விட்டு சென்று விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Trending News