திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டிஆர்பி-யில் சன் டிவி-யை சுக்கா போட்ட விஜய் டிவி.. பாக்யா, கண்ணம்மாவிற்கு இவ்வளவு மவுசா

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அந்த வாரம் டிஆர்பி டேட்டிங்கில் தெரிந்துவிடும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் விஜய் டிவி சீரியல்கள் பல மாதங்களாக பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது இந்த வாரம் மீண்டும் முன்னிலை வகித்திருக்கிறது.

கண்ணான கண்ணே: சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியல் அப்பா பொண்ணு பாசத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. சிக்கலில் உள்ள தனது அப்பாவை எவ்வாறு காப்பாற்றப் போகிறார்அதுபோல் கதை களம் அமைந்துள்ளது. கண்ணை கண்ணை சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 10-ம் இடத்தில் உள்ளது.

ரோஜா: ரோஜா சீரியல் பரபரப்பான நிறைவு பகுதியை எட்டியுள்ளது. அர்ஜூன் மற்றும் ரோஜா தனது குழந்தையை தொலைத்த நிலையில் அதனை தீவிரமாக தேடி கொண்டு உள்ளதுபோல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. ரோஜா சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 9-ம் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: குழந்தையை வைத்து கேவலமான ஸ்கிரிப்ட் எழுதிய பாரதி கண்ணம்மா சீரியல்.. டிஆர்பிக்காக இப்படி எல்லாமா பண்ணுவீங்க!

ஆனந்த ராகம்: சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியல் இரு பெண்கள் தங்களது பெற்றோரை இழந்து அதன் பிறகு தங்களது வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை மிக அருமையாக அமைந்த கதைக்களமாக அமைந்துள்ளது. ஆனந்த ராகம் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 8-ம் இடத்தை பிடித்துள்ளது.

வானத்தைப்போல: அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ள வானத்தைப்போல சீரியலில், வெற்றி துளசியை டார்ச்சர் செய்து வருவது போல் கதைகளம் அமைந்துள்ளது. இவற்றிலிருந்து துளசி எவ்வாறு தன்னை காப்பாற்றிக் கொள்ள போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். வானத்தைப்போல சீரியல் இந்த வார டிஆர்பி-யில்  7ம் இடத்தில் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்: கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு  4 அண்ணன் தம்பிகள் கடந்த வாரம் இணைந்து ஒரே வீட்டில் தங்கி உள்ளனர். இதைத்தான் இவ்வளவு நாள் ரசிகர்களும் விரும்பியதால் கடந்த வாரம் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து டிஆர்பி-யில் 6-ம் இடத்தை பெற்றிருக்கிறது.

Also Read: பொண்டாட்டி கூட நடிக்க நம்பர் ஒன் சீரியலை விட்டு விலகிய கணவன்.. விஜய் டிவி துரத்திவிட்டும் அடங்கல

எதிர்நீச்சல்: ஜனனி ஆணாதிக்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து குடும்பத்தில் உள்ள பெண்களிடையே மாற்றங்களைக் கொண்டு கொண்டுவருவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளதுபோல் கதைகளம் அமைந்துள்ளது.இது ஆதி குணசேகரனுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.எதிர்நீச்சல் சீரியல் இந்த வார டிஆர்பி-யில் 5-ம் இடத்தில் உள்ளது.

பாரதிகண்ணம்மா: கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலும் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இவ்வளவு நாள் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை வைத்து இழுத்தடித்துக் கொண்டிருந்த நிலையில், அது தற்போது பாரதி கைக்கு கிடைத்திருக்கிறது.

இதன்பிறகு பாரதி தன்னுடைய குழந்தைகளுடன் சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பார் என எதிர்பார்த்த நிலையில், ஹேமா தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தன்னுடைய தந்தையை கண்டுபிடிக்க உயிரை பணயம் வைத்திருக்கிறார். இப்படி விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்ட பாரதிகண்ணம்மா டிஆர்பி-யில் இந்த வாரம் 4-ம் இடத்தைப் பெற்றுள்ளது.

பாக்கியலட்சுமி: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில வாரங்களாக பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் டிஆர்பி யில் 3-ம் இடத்தை பெற்றிருக்கிறது. இதில் இனியா கோபியின் வீட்டில் இருந்து கொண்டு தந்தையை மீண்டும் தன்னுடைய அம்மாவுடன் சேர்த்து வைப்பதற்காக பக்கா பிளான் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read: வந்த வேலை முடிஞ்சிடுச்சு.. சக்கரை பொங்கல் வடகறியாக மாறிய கோபியின் வாழ்க்கை

சுந்தரி: சன் டிவியில் சுந்தரி சீரியல் பரபரப்பான கதை களத்தில்சென்றுக்கொண்டிருக்கிறது. கார்த்திக் எப்பொழுது அனுவிடம் வசமாக மாட்டிக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவிவருகிறது. இது ஒருபுறம் இருக்க அருண், முருகன் அவர்களை பழிவாங்க திட்டம்திட்டுவது போல் கதைக்களம் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிறது. சுந்தரி சீரியல் இந்த வார டிஆர்பி டேட்டிங்கில் 2ம் இடத்தில் உள்ளது.

கயல்: சன் டிவியில் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியலில் ஒரு பெண் தனது குடும்பத்தின் சூழ்நிலைகளையும், தனது பெரியப்பாவின் சூழ்ச்சியிலிருந்து ஒவ்வொரு முறையும் தனது குடும்பத்தினை ஒரு சராசரி பெண்ணாக இருந்து எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதை கொண்டு சீரியலின் கதைகளம் அமைந்துள்ளது. இந்த சீரியல் துவங்கப்பட்ட நாளிலிருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருப்பதுடன் இந்த வாரமும் முதலிடத்தில் உள்ளது.

இவ்வாறு இந்த 10 சீரியல்களும் டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 10 சீரியல்கள் ஆகும். இதில் தினமும் எதிர்பார்க்க முடியாத திருப்பங்களை கொடுத்துக்கொண்டிருக்கும் யூகிக்க முடியாத கதைகளையும் கொண்டுள்ள சீரியல்களை தான் சின்னத்திரை ரசிகர்கள் நாள்தோறும் பார்க்க துடிக்கின்றனர்.

Trending News