வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வந்த வேகத்திலேயே ஊத்தி மூடப்பட்ட விஜய்டிவி சீரியல்.. நடிகையின் ராசி அப்படியாம்

விஜய் டிவியில் சீரியல் என்றாலே சின்னத்திரை ரசிகர்களிடையே தனி மவுசு. அந்த வகையில் புது புது கதைக்களத்துடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்தடுத்த புதிய சீரியல்களை தரை இறக்கி கொண்டிருக்கிறது. அப்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட புத்தம் புது சீரியல் தான் வைதேகி காத்திருந்தாள். இந்த சீரியலில் கதாநாயகியாக சரண்யாவும், கதாநாயகனாக ப்ரஜின் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர்.

ஆனால் கதாநாயகன் ப்ரஜின் அவர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், வைதேகி காத்திருந்தாள் சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து அந்த சீரியலில் கதாநாயகனாக, ஏற்கனவே சரண்யா உடன் தெலுங்கில் சூப்பர் ஹிட் சீரியல் ‘ரோஜா’ சீரியலில் ஜோடி சேர்ந்த முன்னா கதாநாயகனாக நடிக்க போகிறார் என்ற தகவல் கிடைத்தது.

இவர் ஏற்கனவே விஜய் டிவியின் ராஜபார்வை என்ற சீரியலில் கண்ணு தெரியாத கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் இவர் சன் டிவியில் சந்திரலேகா உள்ளிட்ட பல சீரியல்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

எனவே சரண்யா-முன்னா இருவரும் வைதேகி காத்திருந்தாள் சீரியலில் ஜோடியாக நடிக்க போகின்றனர் என எதிர்பார்த்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் செய்தியின்படி வைதேகி காத்திருந்தாள் சீரியலே ஊத்தி மூட விஜய் டிவி முடிவெடுத்து விட்டதாம்.

ஏனென்றால் ப்ரஜின் இந்த சீரியலில் இருந்தால்கூட சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்பு இருந்திருக்கும். அவர் அந்த சீரியல் இருந்து விலகியதால் இந்த சீரியலை நிறுத்திவிடலாம் என்று விஜய் டிவி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அத்துடன் சரண்யா இதுவரை நடித்த சீரியல்கள் எல்லாம் ஒரு வருடம் கூட இருக்க மாட்டேங்குது என்றும் சோஷியல் மீடியாவில் சரண்யாவை கிண்டலடித்து கொண்டிருக்கின்றனர். மேலும் சரண்யா நடிக்கிற எல்லா சீரியல்களிலும் நடிகர் நடிகைகளை மாற்றி சீரியலின் விறுவிறுப்பை குறைத்து விடுவதாக ரசிகர் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.

Trending News