புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டான் படத்தை பார்த்த விஜய்.. பூரித்துப் போன சிவகார்த்திகேயன்!

லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வரும் மே 13ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் டான். இத்திரைப்படம் கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், இவர்களுடன் எஸ்ஜே சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

ஏற்கனவே டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அட்லீ விஜய் படங்கள் இயக்கும் போது இவரும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளதால் அப்போதே சிபிசக்கரவர்த்தி விஜய்க்கும் இடையே ஒரு நட்பு ஏற்பட்டுள்ளது.

டான் படத்தை ஏற்கனவே சிபிச்சக்கரவர்த்தி குறும்படமாக எடுத்து அதில் பல நடிகர்கள் நடித்திருப்பதுபோல் காட்சிகள் அமைத்திருப்பார்கள். இதனை தளபதிவிஜய் இடம் போட்டுக் காட்டியுள்ளார். இதனை பார்த்த விஜய் ‘டேய் நல்லா இருக்குடா’ என கூறி விட்டு சென்றதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது சிபிச் சக்கரவர்த்தி இயக்கியுள்ள குறும்படம் தான் இப்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது கதையில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தி அதனை பெரிய படமாக உருவாக்கி உள்ளனர்.

ஆனால் ஒரு சிலர் விஜய், டான் படத்தை பார்த்ததாக கூறியதால் சிவகார்த்திகேயன் படத்தை தான் அவர் பார்த்து விட்டார் என கூறி வருகின்றனர். ஆனால் சிபிச்சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் குறும்படத்தை தான் அவர் பார்த்துள்ளார்.

கூடிய விரைவில் விஜயுடன் இணைந்து ஒரு படத்திலாவது பணியாற்றி விட வேண்டும் என்பது தனது ஆசையாக இருப்பதாக சிபிச்சக்கரவர்த்தி கூறியுள்ளார். இளம் இயக்குனர்களுக்கு தற்போது வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் இளையதளபதி விஜய் சிபிசக்கரவர்த்திக்கும் விரைவில் வாய்ப்பு கொடுப்பார் என அவர் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்.

Trending News