புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜயகாந்த் செய்ததை செய்ய தவறிய விஜய்.. அரசியலின் சூட்சமம் தெரியாமல் தளபதி எடுத்த முடிவு

Vijay who failed to do what Vijayakanth did: எம்ஜிஆரைத் தொடர்ந்து எத்தனையோ சினிமா பிரபலங்கள் அரசியலில் கால் தடம் பதிக்க வேண்டும் என்று நுழைந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலர், வந்த இடம் தெரியாமலேயே போய்விட்டார்கள். இதை மாற்றும் விதமாக விஜயகாந்த் அரசியலுக்குள் ஒரு புரட்சியை ஏற்படுத்த விரும்பினார். அதற்காக ஒத்த ஆளாக நின்னு போராடினார். அதற்கு ஏற்ற மாதிரி அவருக்கு வெற்றியும் கிடைத்தது.

தொடர்ந்து அரசியலில் நின்னு இருந்தால் அவர் கண்டிப்பாக முதலமைச்சர் ஆக வெற்றி பெற்றிருப்பார். இடையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர்ந்து அரசியலில் ஈடுபட முடியாமல் போய்விட்டது. அத்துடன் விஜயகாந்த் அரசியலில் நின்ற பொழுது அவர் செய்த ஒரு விஷயம் என்னவென்றால் இவருடைய ரசிகர்களுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் சீட்டு கொடுத்து நிற்க வைத்தார்.

அதற்கேற்ற மாதிரி விஜயகாந்த் எம்எல்ஏ ஆனார். கட்சியின் பொதுச் செயலாளராகவும் வெற்றி பெற்றார். ஆனால் இவருக்கு அடுத்தபடியாக வந்த கமல் மற்றும் சில பிரபலங்கள் யாருமே இதை செய்யவில்லை. எந்த தொகுதியில் யாரு பிரபலமாக இருக்கிறார்களோ, அவர்களை நிற்க வைத்தார்கள். தற்போது இதே விஷயத்தை தான் விஜய்யும் செய்து வருகிறார்.

Also read: விஜய் அண்ணன் எடுத்த முடிவால் நொந்து போன ஆசைத்தம்பி.. பெட்டி படுக்கையை எடுத்துக்கிட்டு ஒரேடியா செட்டிலான அட்லி

அதாவது விஜய் அரசியலுக்குள் நுழைந்தது மற்றவர்களை விட இவருடைய ரசிகர்களுக்கு தான் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஆனால் இப்பொழுது அவர்களுக்கு சீட்டு இல்லை என்று விஜய்யின் நடவடிக்கையை பார்க்கும் பொழுது தெரிகிறது. இதை விஜய்யின் ரசிகர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அத்துடன் யாரெல்லாம் யூடியூப் மூலமாக பிரபலமாக இருக்கிறார்களோ, அவர்களை நிற்க வைப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார். மேலும் அவர்களை டிவியில் அரசியல் பற்றி பேச வைக்கவும் தயாராகி விட்டார். இப்படியே ஒவ்வொரு தொகுதியிலும் யார் பேமஸ் ஆக இருக்கிறார்களோ அவர்களை எலக்ஷனில் நிற்க வைக்க போகிறார்.

இதே மாதிரி தான் சர்க்கார் படத்திலும் நடந்தது. இப்பொழுது அதையே உண்மையாக எடுத்துக் கொண்டு செய்யப் போகிறார். ஆனால் இவர் இப்படி செய்வதை ரசிகர்கள் நல்ல விஷயமாக பார்க்க மாட்டார்கள். கண்டிப்பாக இது அவர்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தும். இப்படி கமல் செய்ததால் தான் அவருடைய அரசியல் தோல்விக்கும் ஒரு காரணம் என்று பேசப்படுகிறது. அரசியலின் சூட்சமங்களை தெரியாமல் விஜய் எடுத்த முடிவு மிகப்பெரிய தவிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

Also read: விஜய் அடுத்து அரசியலில் எடுக்கப் போகும் முக்கிய முடிவுகள்.. அட! முதல்வன் பட ரேஞ்சுக்கு இருக்கே

Trending News