சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

விஜயகாந்தை ஓரம் கட்ட நடந்த சதி.. நண்பனால் வழி மாறிய சினிமா வாழ்க்கை

தமிழ் சினிமாவில் கமல், ரஜினி என இருவரும் கொடிக்கட்டி பறந்த காலத்தில் தனக்கென ரசிகர் சாம்ராஜ்யம் உருவாக்கியவர் விஜயகாந்த். வளர்ந்து வந்த காலத்தில் இவர் ரஜினி, கமலை ஓரம் கட்டும் அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்து இருந்தார். தொழில் முறையில் சூழ்ச்சிகள் நிறைந்த திரைத்துறையில் ஒரு முறை விஜயகாந்தை அழிக்கவும் வேலைகள் நடந்துள்ளன.

ஒரு கட்டத்தில் விஜயகாந்த் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்விகள் சந்தித்து வந்த நிலையில், பெரிதாக அவரிடம் படங்கள் இல்லை. இதனை பயன்படுத்திக்கொள்ள நினைத்த பிரபல தயாரிப்பு நிறுவனம் சமகால நடிங்கர் ஒருவரின் படத்தில் வில்லனாக நடிக்க விஜயகாந்தை அணுகி 1 லட்ச ரூபாய் சம்பளமும் தர சம்மதித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்த விஜயகாந்த் அதனை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார். ஆனால், சமகால நடிகர் ஒருவரின் படத்தில் வில்லனாக நடித்தால் பின்னர் சோலோ ஹீரோவாக நடிக்க பெரிய அளவில் வாய்ப்புகள் வராது என விஜயகாந்த் அறிந்திடவில்லை.

இந்த செய்தியை கேள்வி பட்ட நண்பர் ராவுத்தர் உடனே விஜயகாந்திடம் சென்று ஹீரோவாக  மட்டுமே நடிக்க பிறந்தவன் நீ, எந்த நெருக்கடியையும் நான் சமாளிக்க தயார், இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார். விஜயகாந்தால் ராவுத்தரின் வார்த்தையை மீற முடியவில்லை.

அதனால் வில்லனாக நடிக்க மறுத்தும் விட்டார். பின்நாளில் ராவுத்தர், விஜயகாந்த் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். விஜயகாந்த் அன்று நெருக்கடியை சமாளிக்க வில்லனாக நடித்து இருந்திருந்தால் கொஞ்ச காலங்களில் காணாமல் போயும் இருக்கலாம்.

ஆனால் ராவுத்தர் கூறிய வார்த்தையை நம்பி அதற்கு கட்டுப்பட்ட விஜயகாந்த் நட்பிற்கு கொடுத்த மதிப்பினை இன்று வரை திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

Trending News