சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

ரஜினி முன்பு தரையில் உட்கார்ந்த விஜயகாந்த்.. பதறிப்போன சூப்பர் ஸ்டார்

புரட்சி கலைஞர், கேப்டன் என்று பலரால் விரும்பி அழைக்கக்கூடிய நடிகர் விஜயகாந்த் மிகவும் பணிவானவர். அனைவருக்கும் உதவக் கூடிய மனப்பக்குவத்தை கொண்ட விஜயகாந்த், தனக்கு பிடித்த நடிகரான நடிகர் ரஜினியிடம் தாழ்மையுடன் ஒரு கலை விழாவிற்கு அழைத்த சம்பவத்தை பற்றி பார்க்கலாம்.

விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜன் சினிமாவில் வெள்ளையாக இருப்பவர்கள் தான் நடிகர்களாக நடிக்க முடியும் என்ற எழுதப்படாத விதியை விஜயகாந்தும் ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்துள்ளார். நிறத்தின் காரணமாக பல இடங்களில் விஜயகாந்த் நிராகரிக்கப்பட்டார். அந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக மக்கள் மனதில் ஆழமாக பதிந்தார்.

இந்த சூழலில் நடிகர் விஜயகாந்தும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவரது முதல் திரைப்படமான இனிக்கும் இளமை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்து இருந்தார். அப்போது அவரது பெயரை மாற்ற நினைத்த இயக்குனர் எம் ஏ காஜா ரஜினிகாந்த் வளர்ந்து வருவதை பார்த்து அவரின் பெயரிலிருந்து காந்த் என்பதை எடுத்து விஜயராஜா என்பதை விஜயகாந்த் என்று மாற்றினார்.

அப்போது இருந்தே விஜயகாந்த் ரஜினி மீது மிகவும் பற்றுக் கொண்டவர். மேலும் விஜயகாந்தின் தம்முடைய பல படங்களில் அரசியல், சமூகம் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து நடித்திருப்பார். விஜயகாந்தின் ஆக்சன் திரைப்படங்கள் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் பிடித்தமான திரைப்படங்களாக மாறியுள்ளது. விஜயகாந்த் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

அப்போது நடிகர் சங்கத்தில் நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி திரட்டும் வகையில் மலேசியாவில் கலை விழா ஒன்றை விஜயகாந்த் ஏற்பாடு செய்தார். அந்த கலை விழாவிற்கு நடிகர் கமல்ஹாசனின் வீட்டிற்கு சென்று விஜயகாந்த் பத்திரிக்கை கொடுத்து விட்டு கமல்ஹாசனிடம் வரும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு கமலஹாசனும் வருகிறேன் என்று கூறினார்.

அதே சமயத்தில் நடிகர் ரஜினியின் வீட்டிற்கு சென்ற விஜயகாந்த் திடீரென்று கீழே அமர்ந்து கொண்டு ரஜினியிடம் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். இதை பார்த்த ரஜினி அதிர்ச்சியடைந்து என்ன விஜி இப்படி எல்லாம் பண்ற என்று கேட்டார்.

நடிகராக மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தின் தலைவராக திகழ்ந்த விஜயகாந்த் இவ்வளவு பணிவாகவும் பழசை மறக்காமல் ரஜினியிடம் நடந்துகொண்ட விதம் இன்றளவும் யாராலும் மறக்கமுடியாத நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ரிசன்ட் ஆக விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியானது கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் அவர் உடல் நலம் சரியில்லாமல் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் விரைவாக உடல் நலம் குணம் பெற வேண்டும் என்று பலரும் வேண்டிக் கொள்கின்றனர்.

Trending News