வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

செல்லப் பிள்ளையாய் இருந்த விஜயகாந்த் கலைஞரை எதிர்த்த காரணம்.. சிஸ்டம் சரியில்ல என ஒதுங்கிய ரஜினி

Captain Vijayakanth: நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது சாதாரணமாக நடக்கும் விஷயம் தான். அதில் வெற்றி பெறுபவர்கள் ஒரு சிலர் தான். அப்படி கட்சி தொடங்கிய நிறைய நடிகர்கள் ஏதாவது ஒரு பெரிய கட்சிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள். ஆனால் கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்று சக்தியாக தன் கட்சியை கொண்டு வந்தார். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆக்டிவாக இருந்த காலத்தில் அவர்களை எதிர்த்து அரசியல் களம் கண்டார்.

தன்னையே நம்பி இருக்கும் தன்னுடைய விசுவாசிகள் ஆரம்பித்த ரசிகர் மன்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கேப்டன் கட்சி ஆரம்பித்தார். அவர் நினைத்திருந்தால் தொண்டர்களிடம், சினிமா கலைஞர்களிடம் வசூலித்து கட்சியை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் தன்னுடைய சொந்த சொத்தை வித்து மதுரையில் மாநாடு கூட்டி கட்சியை தொடங்கினார்.

கலைஞரை எதிர்த்த கேப்டன்

எதிர்பாராத விதமாக அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்த விஜயகாந்த் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஆனது எல்லாம் வரலாறு. சிங்கம் போல் கர்ஜித்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்பு விஜயகாந்த் பேசிய பேச்சு எல்லாம் இன்று பார்த்தாலும் புல்லரித்து விடும். அந்த அளவுக்கு தைரியமும், வீரமும் உள்ள மாமனிதன் தான் விஜயகாந்த்.

Also Read:இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவிக்கும் நன்றி கெட்ட நடிகர்.. செய்நன்றி மறந்தால் இப்படித்தான்

கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது கலைஞர் கருணாநிதிக்கு ரொம்ப பிரியப்பட்ட மனிதராக இருந்தார். விஜயகாந்த்திற்கும் கலைஞர் மீது பெரிய மரியாதையும், அதீத அன்பும் இருந்தது. ஆனால் அரசியல் களம் என்று வந்தபோது விஜயகாந்த் தைரியமாக கருணாநிதியை எதிர்த்து நின்றார். கருணாநிதி அரசியலில் ஆக்டிவாக இருந்த காலம் வரைக்கும் எப்படியாவது விஜயகாந்து தன்னிடம் வந்து சேர்ந்து விடுவார் என ரொம்பவே எதிர்பார்த்தார்.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையில் தான் கேப்டனுக்கு திருமணம் நடைபெற்றது. அப்படி அவர் மீது கொள்ளை அன்பு வைத்திருந்த விஜயகாந்த் கருணாநிதியை எதிர்த்ததற்கான காரணமும் உண்டு. மத்திய நெடுஞ்சாலை துறை ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் இடத்தை பாலம் கட்டுவதற்காக கேட்டிருந்தது. அப்போது அந்த கட்டிடத்தை இடைக்காமலேயே எப்படி பாலம் கட்டலாம் என பிளான் போட்டு விஜயகாந்த் கருணாநிதி இடம் கொடுத்திருக்கிறார். இருந்தும் கருணாநிதி அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தான் அரசியலில் கருணாநிதியுடன் இணையவே கூடாது என முடிவெடுத்தார்.

தமிழக அரசியலில் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அல்லது அதிமுக என இரண்டு சாய்ஸ்களை வைத்துக் கொண்டிருந்த மக்கள் அதை தவிர்த்து ஒரு கட்சி இருக்கிறது என நம்பியது தேமுதிகவை தான். இது போன்ற ஒரு வெற்றி இதுவரை அரசியல் தொடங்கிய எந்த நடிகர்களுக்கும் கிடைக்கவில்லை. விஜயகாந்தின் உடல்நிலை சரியாக இருந்திருந்தால் எம்ஜிஆருக்கு அடுத்து ஒரு கட்சியை நிறுவி பெரிய அரசியல்வாதியான நடிகர் விஜயகாந்த் ஆக தான் இருந்திருப்பார்.

கமல் மற்றும் ரஜினி இருவருமே அரசியல் பேசியது கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தான். தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது என கமல் கட்சி ஆரம்பித்து இப்போது திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். சிஸ்டம் சரியில்லை என்று கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்ன ரஜினி உடல்நிலை சரியில்லை மக்கள் பணி செய்ய முடியாது என்று கழண்டு கொண்டார். அரசியலில் அசைக்க முடியாத இரு பெரும் துருவங்கள் இருந்தபோது தைரியமாக களம் கண்ட சிங்கம் கேப்டன் மட்டும்தான்.

Also Read:விஜயகாந்த் வாழ்க்கை கொடுத்த 6 வில்லன்கள்.. மீசைக்கு பேர் போன ராஜேந்திரன்

Trending News