Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

TVK விஜய் அவங்க கூட சேர்ந்த அழிவது உறுதி.. சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலத்தின் பேட்டி

TVK விஜய் அவங்க கூட சேர்ந்த அழிவது உறுதி.. சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலத்தின் பேட்டி

Vijay : திரையில் தனது நடிப்பை சைலன்டாக வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற விஜய் அரசியலில் குதித்தது யாரும் எதிர்பாராத ஒன்றுதான். விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி தமிழகத்தையே அதிர வைத்தார். இவர் புதிய ஜனநாயகமான தமிழ்நாட்டை […]

Vijay : திரையில் தனது நடிப்பை சைலன்டாக வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற விஜய் அரசியலில் குதித்தது யாரும் எதிர்பாராத ஒன்றுதான்.

விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி தமிழகத்தையே அதிர வைத்தார். இவர் புதிய ஜனநாயகமான தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல வாக்குறுதிகளையும் கொடுத்தார்.

இந்த ஆட்சி மக்களுக்காக அதிகாரத்திற்காக அல்ல என்று பல முழக்கத்தை வெளியிட்ட விஜய்க்கு தமிழகத்தில் நிறைய இளைஞர்களின் ஆதரவும் கிடைத்தது. நல்ல கல்வி, நிலையான வேலை வாய்ப்பு, ஊரக மேம்பாடு, ஊழல் இல்லாத சமுதாயம் இதை உருவாக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளோடு விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார்.

விஜய்க்கு சினிமாவிலேயே அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் இதனாலேயே இவர் ஆட்சியில் இடத்தை பிடிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சினிமாவில் நாயகனாக மட்டுமின்றி, இனி அரசியலிலும் நாயகனாக திகழவிருக்கிறார் தளபதி விஜய். அவரது ‘ஆட்சி’ உண்மையில் ஒரு புதிய தமிழகத்தின் துவக்கமா என்பதை காலமே தீர்மானிக்கும்!

இந்நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி விஜயை பற்றி பேசிய வீடியோ யூடியூபில் வைரலாகியுள்ளது.

விஜயின் கட்சி அழிந்துவிடும்

“பாஜக எங்கள் கொள்கை எதிரி என்று விஜய் தனது முதல் மாநாட்டிலேயே சொல்லிவிட்டார். அதனால் எந்த காலத்திலும் த.வெ.க பாஜக உடன் கூட்டணி அமைக்காது.

அதையும் மீறி கூட்டணி அமைத்தால் அந்த நிமிடமே த.வெ.க அழிவது உறுதி” என்று யூட்யூபில் வலைப்பேச்சு பிஸ்மி பேசியுள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.