Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பாதி தெறி, மீதி மெர்சல்.. மாஸ் சம்பவம் செய்யும் ஜனநாயகன்

பாதி தெறி, மீதி மெர்சல்.. மாஸ் சம்பவம் செய்யும் ஜனநாயகன்

Vijay : விஜய்யின் 51 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள். மேலும் இன்று விஜய் தன்னுடைய பிறந்த நாளை தனது நண்பன் சஞ்சீவி குழந்தைகளுடன் கேக் வெட்டி […]

Vijay : விஜய்யின் 51 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள். மேலும் இன்று விஜய் தன்னுடைய பிறந்த நாளை தனது நண்பன் சஞ்சீவி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சூழலில் விஜய் கடைசியாக நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது. அரசியலில் களம் காண உள்ள விஜய் இந்தப் படத்தை தனது அடித்தளமாக நினைக்கிறார்.

ஆகையால் படத்தில் நிறைய அரசியல் கருத்துக்களை பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவருடைய லுக் மெர்சல் படத்தில் உள்ளது போல இருக்கிறது. தெறி கெட்டபில் போலீஸ் லுக்கிலும், மெர்சல் போல மீசையும் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் லுக்

அதுவும் இரட்டை கத்தியுடன் விஜய்யின் பெயர் வருகிறது. ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தில் அரசியல் சம்பந்தமான நிறைய விஷயங்கள் பேசப்பட்டது. இதனால் படத்திற்கு நிறைய பிரச்சனைகளும் வந்திருந்தது.

அதேபோல் இப்போது ஜனநாயகன் படத்தில் இரட்டை கத்தியுடன் விஜய் இருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது. மேலும் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

விஜய்யின் கதாபாத்திரம் இப்போதைக்கு கிட்டத்தட்ட ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. ஆகையால் எச் வினோத் விஜய்யை வைத்து ஒரு மாசான சம்பவம் ஜனநாயகன் படத்தில் செய்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.