வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் விஜய்யின் உடன்பிறப்பு.. 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தோல்வி இயக்குனருடன் கூட்டணியா.?

Prabhudeva-Vijay: பிரபுதேவா கடந்த சில வருடங்களாகவே அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து பிஸியாக நடித்து வருகிறார். இப்போது கூட அவர் விஜய்யுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் இவருடைய அடுத்த படம் பற்றிய தகவலும் கசிந்துள்ளது.

அதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக விஜய்யின் உடன்பிறப்பு நடிக்க இருப்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். நிச்சயம் இது எதிர்பார்க்காத காம்போ தான்.

லியோ படத்தில் விஜய்யின் ட்வின் சகோதரியாக எலிசா என்ற கேரக்டரில் மடோனா நடித்திருந்தார். சிறிது நேரமே இருந்தாலும் அவர் வரும் காட்சிகள் பயங்கர அலப்பறையாக இருந்தது. அதை அடுத்து தற்போது அவர் பிரபுதேவா உடன் இணைந்து இருக்கிறார்.

Also read: பிரபுதேவாவிடம் கெஞ்சிய நயன்தாரா.. 12 வருடத்திற்கு பிறகு வெளிவந்த உண்மை

முழுக்க முழுக்க காமெடி கதைக்களமாக உருவாகும் இப்படத்தின் டைட்டில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. இது ஒரு பக்கம் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தாலும் பிரபுதேவா மீண்டும் தோல்வி இயக்குனருடன் இணைந்து இருக்கிறாரே என்ற ஒரு பேச்சும் எழுந்துள்ளது.

2000 காலகட்டத்தில் பல காமெடி திரைப்படங்களை கொடுத்த சக்தி சிதம்பரம் பிரபு, பிரபுதேவாவை வைத்து சார்லி சாப்ளின் படத்தை இயக்கி வெற்றி கண்டார். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளியான போது எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் இந்த கூட்டணி நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து இருக்கிறது. ஆனால் இந்த முறை ரசிகர்களை கவரும் வகையில் நகைச்சுவையோடு புதுமையான கதைக்களமும் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஆடியன்ஸ் ஆதரவு இருக்குமா என்பது படம் வெளி வந்தால் தெரிந்து விடும்.

Also read: அம்மாவாக விக்ரமுடன் நடிக்க மறுத்த திரிஷா.. ஆனா விஜய்க்கு ஒத்துக்கிட்ட காரணம் இதுதான்

Trending News