Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அடுத்த வருடம் 3 படங்களை வெளியிட டார்கெட் செய்த தளபதி.. ஒரே வருடத்தில் 1500 கோடி வசூலா

அடுத்த வருடம் 3 படங்களை வெளியிட டார்கெட் செய்த தளபதி.. ஒரே வருடத்தில் 1500 கோடி வசூலா

தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதை அடுத்து அவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு […]

தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதை அடுத்து அவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. மேலும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல தளபதியின் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட்களை சோசியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்களை கொண்டாட வைக்கும் படியான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் தளபதி 66 திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. இதையடுத்து விஜய், அட்லியுடன் தனது 68 வது படத்தில் இணைகிறார். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து உருவாகப்போகும் இந்த படமும் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்த மூன்று திரைப்படங்களும் அடுத்த வருடம் அதாவது 2023 ல் வெளியாகப் போகிறது. அதில் தளபதி 66 அடுத்த வருட பொங்கல் ட்ரீட்டாக வெளியாக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்த திரைப்படம் சம்மர் கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது. மேலும் அட்லி உடன் இணையும் அந்த திரைப்படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதன் மூலம் அடுத்த வருடம் விஜய்யின் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைசாக அமைந்துள்ளது. இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு விஜய், வெற்றிமாறன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். வெற்றிமாறன் தற்போது விடுதலை, வாடிவாசல் போன்ற திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார். அதை எல்லாம் முடித்துவிட்டு அவர் விஜய்யுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.