வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக்பாஸ் வருவதற்கு 5 கண்டிஷன் போட்ட அமலாபால்.. வரவே வேண்டாம் என கூறிய விஜய் டிவி

பிக்பாஸ் சீசன் 6க்கான ப்ரோமோ கடந்த வாரம் வெளியானது. இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு ஒரு மிகப்பெரிய தொகை சம்பளமாகவும் பேசப்பட்டு இருக்கிறது.

இது போலவே பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் பெயரும் வெளியாகிவிட்டது. ஷில்பா மஞ்சுநாத், மோனிகா, ராஜ லட்சுமி, கார்த்தி குமார் , செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஸ்ரீநிதி, சத்யா சீரியல் புகழ் ஆயிஷா, GP முத்து, ரக்சன், டிடி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Also Read: எங்களால அசிங்கப்பட முடியாது.. பிக் பாஸுக்கு ஆளில்லாமல் தெருத்தெருவாக அலைய போகும் விஜய் டிவி

சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத பிக்பாஸில் இன்னும் சர்ச்சையை ஏற்படுத்து விதமாக இந்த சீசனில் கலந்து கொள்ள நடிகை அமலா பாலுக்கு விஜய் டிவி அழைப்பு விடுத்தது இருக்கிறது. ஆனால் அமலாபால் பிக்பாஸில் கலந்து கொள்ள விஜய் டிவிக்கே கண்டிஷன் போட்டு இருக்கிறார்.

தான் பிக்பாஸில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த நிகழ்ச்சி செட்டில் நடக்காமல் காடு அல்லது மலைப்பகுதிகளில் தான் நடக்க வேண்டும் என்றும், மேலும் பிக்பாஸில் இப்போது இருக்கும் எந்த ரூல்சும் இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இருக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார்.

Also Read: வேட்டைக்கு ரெடியான ஆண்டவர்.. No.1 ட்ரெண்டிங்கில் பிக் பாஸ் சீசன் 6 வீடியோ

இதற்கும் ஒரு படி மேலே போய், அந்த நிகழ்ச்சியில் நான் என்ன செய்கிறேன் என்பதை எந்த எடிட்டும் செய்யாமல் டெலிகாஸ்ட் பண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் இப்படி ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்க எந்த வாய்ப்பும் இல்லை.

அமலா பாலின் இந்த கண்டிசன்களை கேட்ட விஜய் டிவி சும்மாதான் வருவீங்களா என்று கேட்டோம், நீங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என கூறிவிட்டார்களாம். இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து டெலிகாஸ்ட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பிக்பாஸில் களமிறங்கும் 2 கவர்ச்சி நடிகைகள்.. டிஆர்பி-க்கு பலே திட்டம் போட்டு இருக்கும் விஜய் டிவி

Trending News