வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சும்மா பறந்து பறந்து அடித்தும் வாய்ப்பு தராத லோகேஷ்.. ஏஜென்ட் டீனா போல் லியோ வில் சான்ஸ் கேட்ட நடிகை

கடந்த வருடம் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்து மிகப்பிரமாண்டமாக வெளிவந்த படம் விக்ரம். இதில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் மிக சஸ்பென்ஸ் ஆகவும், அதிரடியாகவும் கதையை நகர்த்திருப்பார். இது பார்ப்பவர்களின் மனதில் அடுத்து எப்படி வரும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து ஒவ்வொரு கேரக்டரையும் அசர வைத்திருப்பார்.

அப்படிப்பட்ட கேரக்டரில் ஒன்றுதான் ஏஜென்ட் டீனா கேரக்டர். யாருமே கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் இப்படி ஒரு திருப்பத்தை. அந்த அளவிற்கு இவரது கதாபாத்திரத்தை ரசிக்கும்படி பறந்து பறந்து அடித்து ஆச்சரியப்பட வைத்திருப்பார். இவரின் இந்த கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. அதைவிட இந்த காட்சியை திரையில் லோகேஷ் காட்டின விதம் சூப்பராக அமைந்திருக்கும்.

Also read: தியேட்டரை தாண்டி ஓடிடியிலும் சாதனை படைத்த விக்ரம்.. படத்தைப் பார்க்க கிளிக் செய்யவும்

ஆனால் இந்த கேரக்டருக்கு முதலில் இவர் தேர்வு செய்யப்படவில்லை. இவருக்கு பதிலாக சீரியல் நடிகை தேவி பிரியா தான் ஆடிஷன் போயிருக்கிறார். அதற்கு இவர் போகும் போதே கண்டிப்பாக நாம் தான் தேர்வு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறார். ஏனென்றால் எப்படியாவது கமல் படத்தில் நடித்து விட வேண்டும் என்று பெரிய ஆசையில் போயிருக்கிறார்.

இதனால் கதையை கேட்டு ஒவ்வொரு விஷயங்களையும் நன்றாக செய்திருக்கிறார். பின்னர் கதைக்கு தேவையான சண்டை காட்சிகள் எல்லாம் செய்து முடித்துவிட்டு ஓகே ஆகிவிட்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் அந்த போன் காலில் அதாவது ஏஜென்ட் டீனா சார் என்று சொல்லும் போது அந்த குரல் அந்த கதைக்கு ஏற்ற மாதிரி செட் ஆகவில்லை என்று லோகேஷ் நிராகரித்து விட்டார்.

Also read: விக்ரம் 2வை எதிர்பார்த்த கமலுக்கு வந்த சிக்கல்.. எல்லா இடத்திலும் மேயும் லோகேஷ் கனகராஜ்

இதனால் ரொம்பவும் மன உடைந்து போன தேவி பிரியா அடுத்த வாய்ப்பு கண்டிப்பாக கொடுக்கவேண்டும் என்று லோகேஷ் இடம் கேட்டிருக்கிறார். அவரும் அந்த நேரத்தில் இவரை ஆறுதல் படுத்தும் விதமாக சரி பார்க்கலாம் என்று கூறி இருந்திருக்கிறார். இந்த வார்த்தையை தேவிபிரியாவிற்கு ரொம்ப நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.

இதனால் இப்பொழுது தேவி பிரியா அவர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு லோகேஷ் இடம் லியோ படத்தில் அந்த மாதிரி ஏதாவது கேரக்டர் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார். மேலும் அந்த மாதிரி ஒரு கேரக்டர் லியோ படத்தில் இருக்குமா என்பது ரசிகர்களிடம் பெரிய கேள்விக்குறியாய் எழுப்பி வருகிறது.

Also read: லோகேஷ் அசுர வளர்ச்சிக்கு இவர்தான் காரணம்.. அவங்க இல்லனா மாநகரம் படத்தோட கேரியர் க்ளோஸ் ஆயிருக்கும்

Trending News