தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக பார்க்கப்படுவது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் மிகக்குறுகிய காலத்திலேயே அதிக வெற்றி படங்களை கொடுத்துள்ளது. இந்நிலையில் முதல்முறையாக விக்ரம் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் விக்ரமின் மகான் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இதுதவிர மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன், கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா ஆகிய படங்களில் விக்ரம் நடித்து வருகிறார்.
தற்போது விக்ரம் மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் 61 படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் விக்ரமின் 62வது படத்திற்கு 3 இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர்.இயக்குனர்கள் பாண்டிராஜ், மாரி செல்வராஜ் மற்றும் பிஎஸ் மித்ரன் ஆகியோரில் யார் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
சன் பிக்சர்ஸுக்கு பாண்டிராஜ் நம்ம வீட்டு பிள்ளை மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்களை கொடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. பிஎஸ் மித்ரன் கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ் வித்தியாசமான கதைக்களத்தை எடுக்கக் கூடியவர். விக்ரமும் இது போன்ற படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுவார். இதனால் மாரி செல்வராஜ், விக்ரம் கூட்டணியில் படம் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவலை சன் பிக்சர்ஸ் விரைவில் வெளியிடும்.
சன் பிக்சர்ஸ் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு பிறகு தலைவர் 169 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தை தயாரிக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.