திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிகரம் தொட்ட சிவகார்த்திகேயன்.. தனுஷுக்கு முன்பே சிவாவை அடையாளம் கண்ட நடிப்பு அரக்கன்

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி பெற்ற நடிகர்களுள் ஒருவர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் தான். ஆரம்ப காலங்களில் இவருடைய படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் சிவாவின் தொலைக்காட்சி பயணம் தான்.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் காலம் காலமாக ஒரே மாதிரியான வழக்கம் இருக்கும் பொழுது அதை முற்றிலும் மாற்றி போட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். மிமிக்கிரி, நடனம், நகைச்சுவை என சிவகார்த்திகேயன் தன்னுடைய நிகழ்ச்சி தொகுப்பில் பண்ணாத வித்தியாசமான முயற்சிகளே கிடையாது.

Also Read: வரிசை கட்டி நிற்கும் விக்ரமின் 4 படங்கள்.. பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக வரும் தங்கலான்

விஜய் டிவி தொலைக்காட்சியில் இவர் தொகுப்பாளராக இருக்கும்பொழுது இவரின் திறமையை பார்த்து தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர்களும், நடிகைகளும் வியந்தனர். ஏன் தளபதி விஜய் கூட பல நிகழ்ச்சிகளில் பலமுறை சிவகார்த்திகேயனை ரசித்தும் இருக்கிறார், பாராட்டியும் இருக்கிறார்.

தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனின் திறமையை கண்டறிந்து அவரை சினிமாவுக்குள் கொண்டு வந்தது நடிகர் தனுஷ் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் தனுஷ் உடைய பங்கு மிகவும் முக்கியமான ஒன்று. சிவகார்த்திகேயனுக்காக தனுஷ் நிறைய படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

Also Read: பாக்யராஜ் சாயலில் நடித்த 4 நடிகர்கள்.. டைமிங் காமெடியில் பட்டைய கிளப்பும் சிவகார்த்திகேயன்

ஆனால் தனுஷுக்கு முன்பே சிவகார்த்திகேயனை அடையாளம் கண்டவர் தான் சீயான் விக்ரம். சிவா ஒருமுறை விக்ரமை பேட்டி எடுத்திருக்கிறார் அப்பொழுது பேட்டியிலேயே இருவரும் ரொம்பவும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். விக்ரம் சிவகார்த்திகேயனை ரொம்பவும் ரசித்து இருக்கிறார். விக்ரமுக்கு சிவகார்த்திகேயனின் திறமை மிகவும் பிடித்துப் போய் இருக்கிறது.

பேட்டி முடிந்ததும் சீயான் விக்ரம் நடிகர் சிவகார்த்திகேயனை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். விக்ரம் சிவாவிடம், உங்களிடம் ஒரு ஃபயர் இருக்கிறது, அது உங்களை சினிமாவில் பெரிய ஆளாக உருவாக்கும். உங்கள் முயற்சிகளை கைவிட்டு விடாதீர்கள் என்று ஊக்கம் கொடுத்துள்ளார். மேலும் இன்று வரை சீயான் விக்ரம் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நல்ல நட்புடன் பழகி வருகிறார்.

Also Read: காதுல பூ சுத்துன கமல், சிவகார்த்திகேயன்.. உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா.!

Trending News