Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தளபதி 67 விஜய் சேதுபதி இடத்தை பிடிக்கும் விக்ரம்.. மீண்டும் பயத்தில் விஜய்

தளபதி 67 விஜய் சேதுபதி இடத்தை பிடிக்கும் விக்ரம்.. மீண்டும் பயத்தில் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தை குறித்து விஜய் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்.

பொங்கலுக்கு ரிலீசான விஜயின் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் 250 கோடியை தாண்டி உலகெங்கும் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த படத்தைக் குறித்து விஜய் தற்போது இனம் புரியாத பயத்திலுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும்  அடுத்த படமான தளபதி 67 படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின் போன்ற மிகப்பெரிய வில்லன் பட்டாளமே நடித்து வருகிறார்கள். இவர்களின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் லோகேஷ் செதுக்கி உள்ளாராம்.

இதில் எப்படி விஜய் ஸ்கோர் பண்ண போகிறாய் என்று நினைத்த நிலையில், தற்போது இந்த படத்தில் விக்ரம் இணையவிருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. இந்த வில்லன் எல்லோருக்கும் தலைவன் விக்ரமாக இருப்பார் என தகவல் வெளிவந்துள்ளன.

பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லன்கள் ஹீரோ போல காட்சிப்படுத்துவார். இதில் நடிப்பு அரக்கன் விக்ரம் வில்லனாக நடித்த எப்படி இருக்கும் என பேசி வருகிறார்கள். இதனால் விக்ரமுக்கு முக்கியத்துவம் அதிகம் இருப்பதால் விஜய்க்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்காது.

இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். ஏனென்றால் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யை விட வில்லனாக நடித்த விஜய் சேதுபதி கதாபாத்திரம் தான் அதிகம் பேசப்பட்ட கேரக்டராக இருந்தது.

அதனால் தற்போது விஜய் சேதுபதி இடத்தை தளபதி 67 படத்தில் விக்ரம் பிடிப்பதால், விக்ரமின் கதாபாத்திரத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் தளபதி டம்மி ஆகி விடுவார் என்கின்ற பயம் தற்போது விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. இதை எப்படி சமாளிப்பது என்றும் தீவிரமாக யோசித்து வருகிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.