வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விக்ரமை துரத்தியடித்த 6 தோல்வி படங்கள்.. கோடிக்கணக்கில் நஷ்டம், நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் பல கெட்டப்புகளில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருபவர். இவரிடம் காதல் தோல்வி, அதிரடி, போலீஸ், பைத்தியம் என எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்றார்போல மாறி நடிப்பில் பலரையும் ஆச்சரியப்படுத்துவார். அந்த வகையில் சமீபகாலமாக விக்ரமின் திரைப்படங்கள் பல தோல்வியுற்றன. அத்திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பெரும் தோல்வியை அடைந்தது. அப்படிப்பட்ட ஆறு திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

மகான்: நடிகர் விக்ரம் மற்றும் அவரின் மகனும், நடிகருமான துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மகான் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். ஓடிடியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. விக்ரமின் சுருக்கமான முகம், அவரது வயதை எட்டிப்பார்க்க வைத்த நிலையில், இத்திரைப்படத்தில் அவரை ரசிக்கும் படி அமையவில்லை என்பதே உண்மை.

கோப்ரா: 4 ஆண்டுகளாக கனடா, கொல்கத்தா, கேரளா, சென்னை என பல நகரங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் விக்ரம் பத்து கெட்டப்புகளில் நடித்திருப்பார். டீசர் மற்றும் டிரைலரில் ஏற்பட்ட எதிர்பார்ப்பை பார்த்து ரசிகர்கள் திரையரங்கில் இத்திரைப்படத்தை பார்த்தனர். 3 மணி நேரத்திற்கும் மேலான இத்திரைப்படம் , பார்ப்போருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய நிலையில் கதை சரியாக அமையவில்லை என்பதே படத்தின் தோல்விக்கு மாபெரும் காரணமாக அமைந்தது.

Also Read: அஜித், விஜய், விக்ரம் என கலக்கிய இயக்குனர்.. ஒரு வெற்றிப் படத்திற்காக 15 வருடம் போராடும் அவலம்

கடாரம் கொண்டான்: நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே இத்திரைப்படத்தில் தான் விக்ரமிருக்கு டயலாக்குகள் கம்மி என சொல்லலாம். முழுக்க முழுக்க அதிரடி, ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இத்திரைப்படத்தில் கமலஹாசனின் இளையமகள் அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். திரையரங்கில் படம் வெளியான நிலையில் படத்திற்கு ரசிக்கும் படியான காட்சிகள் இடம் பெறாததால் பல விமர்சனங்களை பெற்று தோல்வியுற்றது..

இருமுகன்: விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இருமுகன் திரைப்படத்தில் திருநங்கையாக விக்ரம் லவ் என்ற கெட்டப்பில் வலம் வந்திருப்பார். இந்த கெட்டப் ரசிகர்களை ஈர்த்த நிலையில், படத்தில் சில காட்சிகள் பார்ப்போருக்கு தொய்வை ஏற்படுத்தியது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இத்திரைப்படத்தின் பாடல்கள் ஹிட்டானாலும் நயன்தாரா, விக்ரம் ஜோடி ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கு அவ்வளவு ஏற்புடையதாக இல்லை எனலாம்.

Also Read: மீண்டும் வரலாற்று படத்தில் நடிக்கப் போகும் விக்ரம்.. இந்த தடவை ஆதித்ய கரிகாலன் கிடையாது

தாண்டவம்: இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய தாண்டவம் திரைப்படத்தில் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருப்பர். ஐ.பி.எஸ் ஆக ஒரு கெட்டப்பிலும், கண்தெரியாத கெட்டப்பிலும் விக்ரம் இத்திரைப்படத்தில் நடித்திருப்பார் . விக்ரம் நடிப்பில் வெளியான காசி படத்திற்கு பின், கண் தெரியாமல் நடித்த இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரிலீஸானவுடன் அத்தனையும் சுக்கு நூறாக நொறுங்கியது.
.
ராஜபாட்டை: நடிகர் விக்ரம் நடித்ததிலேயே அதிக கெட்டப்புகள் போட்ட திரைப்படம் தான் ராஜபாட்டை. இப்படத்தில் இடம்பெற்ற வில்லாதி வில்லன் என்ற பாடலில் மட்டுமே விக்ரம் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் தோன்றுவார்.ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் காட்சிகள் அடங்கிய இத்திரைப்படம் விக்ரமின் கேரியரை இழுத்து மூட வைத்த திரைப்படம் எனலாம். படத்தில் பாடல்களும் சரி, கதையும் சரி அவ்வளவாக ரசிகர்களை ஈர்க்க வில்லை.

Also Read: அவங்கள பார்த்தாலே நடிப்பே மறந்து விடும்.. மேடையில் சிலிர்த்து போய் பேசிய விக்ரம்

Trending News