வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

துணிவை தொடர்ந்து வினோத்தின் அடுத்த படம்.. மாஸ் ஹீரோ உடன் கூட்டணி

இப்போது ரசிகர்களால் பெரிதும் பேசப்படும் இயக்குனர் ஹெச் வினோத். ஆரம்பத்தில் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற வினோத் இதைத்தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கியிருந்தார். அப்போது தான் அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு வினோத்துக்கு கிடைத்தது.

முதலாவதாக அஜித், வினோத் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்த வலிமை, துணிவு படங்கள் அடுத்தடுத்த இதே கூட்டணி அமைந்தது. இப்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

Also Read : அஜித் பற்றி உண்மையை போட்டு உடைத்த ஹெச்.வினோத்.. கல்யாண் மாஸ்டருக்கு ஆச்சரியத்தை கொடுத்த AK

தொடர்ந்து மூன்று முறை அஜித்துடன் கூட்டணி போட்ட நிலையில் இப்போது மற்ற நடிகர்களின் படத்தை இயக்க வினோத் ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் யோகி பாபுவுடன் காமெடி ஜானரில் வினோத் ஒரு படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இப்போது கமல், தனுஷ் இவர்களின் படத்தை தான் வினோத் இயக்க உள்ளார். கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கும் படத்தில் கமல் நடிக்கவிருக்கிறாராம். ஆகையால் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.

Also Read : 12 ஆயிரம் கோடி நிஜ கொள்ளையை வெளிச்சம் போட்டு காட்டிய வினோத்.. துணிவு படத்தில் மறைந்திருக்கும் உண்மை

இதனால் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ், வினோத் கூட்டணியில் முதல்முறையாக ஒரு படம் உருவாக உள்ளது. சமீபகாலமாக தனுஷின் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. திருச்சிற்றம்பலம் படம் தான் ஓரளவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

ஆகையால் தனுஷ் தற்போது ஒரு தரமான வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அந்த வகையில் கேப்டன் மில்லர் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக வினோத்துடன் கூட்டணி போட உள்ளதால் தனுஷ் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read : துணிவு வெற்றியால் அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்.. அப்பாவி நடிகரை டீலில் விட்ட வினோத்

Trending News